94
மறைமலையம் -6 *
சார்ங்கரவன் : நிரயத்தில் விழுவதுதான்.
அரசன் : புருவமிசத்திற் பிறந்தோர் நிரயத்தில் விழ விரும்புகின்றன ரென்பது நம்பத் தகாததொன்றாம்.
சாரத்துவதன் : சார்ங்கரவா! மேன்மேற் பேசுவதிற் பயன் என்ன? குருவின் கட்டளைப்படி செய்துவிட்டோம். இனி நாம் திரும்பிப் போவோம். (அரசனை நோக்கி) இதோநும் மனைவி யிருக்கின்றார்; நீர் அவரை ஏற்றுக் கொள்ளினுங் கொள்ளுக, தள்ளிவிடினும் விடுக. தன் மனைவியினிடத்து எவ்வகையான தலைமை செலுத்தினும் அது பொருந்துவதே யாம். அம்மே கொளதமீ! புறப்படுங்கள். (அவர்கள் புறப்படுகின்றனர்.)
சகுந்தலை : எப்படி? க் கொடியவன்றான் என்னை ஏமாற்றிவிட்டான்; நீங்களுமா என்னை விட்டுப்
போகின்றீர்கள்?
(அவர்களுக்குப் பின்னே புறப்படுகின்றாள்.)
7:
கௌதமி : குழந்தாய் சார்ங்கரவா! இதோ சகுந்தலை பரிவுறும்படி அழுதுகொண்டு நமக்குப் பின்னே வருகின்றாளே! தன் கணவனே தன்னைத் தள்ளிவிட்டுப் பெருங்கொடுமை செய்தால் என் மகள் என்ன செய்வாள்?
சார்ங்கரவன் : (சினத்து : (சினத்துடன் திரும்பி) தூர்த்தே! தன்னெடுத்தமூப்பா யிருக்கப் பார்க்கின்றையோ?
(சகுந்தலை அஞ்சி நடுங்குகின்றாள்.)
சார்ங்கரவன் : சகுந்தலை! அரசன் சொல்லுகிறபடியே நீ இருந்தாயானால், நின் தந்தையார் தமது குடியினின்றும் வழுவிய உனக்கு யாதுதான் செய்யக்கூடும்? அவ்வாறின்றி நின் ஒழுக்கந் தூயதென்றே நீ அறிந்தாயானால், நின் கணவன் வீட்டில் அடிமையாகவாயினும் இருத்தலே உனக்குத் தக்கதாகும். நில், நாங்கள் போகிறோம்
அரசன் : ஓ முனிவரே! நீர் ஏன் இந்த அம்மையை ஏமாற்றுகின்றீர்? வெண்டிங்கள் அல்லிப் பூவினையே அலரச் செய்கின்றது; செஞ்ஞாயிறே தாமரைப் பூவினையே மலரச்