பக்கம்:மறைமலையம் 6.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் -6

கொண்டாடப்படாதென்று மன்னனால் தடைசெய்யப் பட்டிருக்கையில், நீ ஏன் இந்த மாமுகையைப் பறிக்கின்றாய்?

இரண்டு பாங்கிமாரும் : (அஞ்சி) தாங்கள் பொறுக்க வேண்டும்; அவ்வாறு கட்டளை பிறந்திருப்பதை யாங்கள் அறியேம்.

கஞ்சுகி : ஆ! தழைந்த மரங்களும் அவற்றிற் குடி கொண்டிருக்கின்ற பறவைகளும் அரசன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கையில், நீங்கள் இருவீரும் அதனைக் கேட்கவில்லையா? எப்படி?

செழுமா மரங்கள் கொழுமுகை அரும்பியும் பொன்றுகள் பெறாமை கண்டிலிர் கொல்லோ; குரவமுகிழ் நிரம்பி நெடுநா ளாகியும்

விரியா திருத்தல் தெரியிலிர் கொல்லோ;

பனிநாட் கழிந்து நனிநா ளாகியுஞ்

சேவலங் குயில்கள் வாய்திற வாவே;

காம வேளும் புட்டிலி லெடுத்த நாம வெங்கணை புகுத்தி

அச்சமிக் கனனென அறிகுவென் மாதே.

சானுமதி : இனி ஐயமேயில்லை; தவவொழுக்கத்தொடு கூடிய அரசனானவர் மிகுந்த ஆற்றலுடையவர்தாம்.

முதற் பாங்கி : ஐய! மன்னன் மைத்துனரான மித்திராவசு என்பவர், அரசனுக்கு அடித்தொழும்பு செய்து கொண்டிருந்த எங்களை அங்கிருந்து இங்கு வரவிடுத்து, இவ் இளமரக் காவினை ஒழுங்காக வைத்துப் பாதுகாக்குங் கட எங்கட்குத் தந்து சில நாட்கள் ஆயின. ன. அப்படி வந்து விட்டமையினாலேதான் இச் செய்தி முன்னமே எங்களாற்

கேட்கப்படா தாயிற்று.

மயை

கஞ்சுகி : ஆனால் நல்லது, திரும்பவும் நீங்கள் இவ்வாறு செய்யப்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/135&oldid=1577221" இலிருந்து மீள்விக்கப்பட்டது