பக்கம்:மறைமலையம் 6.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் -6

அங்ஙனம் ஏக்கமுற்ற நிலையோடு அவள் நீர்ஒழுகுதலால் மங்கிய பார்வையுடன் திரும்பவும் என்னை உறுத்துப்பார்த்த தானது, நான் கொடியனாயிருந்தும், நஞ்சு ஊட்டிய அம்பின் றுண்டைப்போல் என்னைத் துன்புறுத்து கின்றதே!

சானுமதி : ஓ தான் கருதிய தொன்றிற் பற்றுவைப்பது இப்படித்தான்! (ஏனெனில்) இவர் துன்புறுவது கண்டு எனக்குக் களிப்புண்டாகின்றது.

விதூஷகன் : ஓ நண்பரே! வானத்தில் இயங்கும் யாரோ ஒருவனால் அவ்வம்மை கொண்டுபோகப்பட்டாரென்று கருதுகின்றேன்.

அரசன் : தன் கொழுநனையே தெய்வமாகக் கொண் டொழுகுவாளை வேறு எவன் தொடுதற்குத் துணிவான்? நின்றோழியின் பிறப்பிற் கிடமாயுள்ளவள் மேனகை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்; அவள் தோழிமாரால் நின்றோழி கொண்டுபோகப் பட்டாளென்று என் நெஞ்சம் ஐயுறுகின்றது.

சானுமதி : இவ்வுணர்ச்சியெல்லாம் மறந்துவிட்டது தான் வியக்கத் தகுவது! நினைவுகூர்வது வியக்கத் தகுவதன்று.

அப்படியானால், நாளடைவில் நீர்

விதூஷகன் அவ்வம்மையைக் கூடுவீர்.

அரசன் : எங்ஙனம்?

விதூஷகன் : தன் கணவனைப் பிரிந்து தம் மகள் துன்புறுதலை நீளப் பார்க்கப் பெற்றோர் தாங்க மாட்டார்கள்.

அரசன் : தோழனே!

காரிகை தன்னையான் கலந்தி ருந்தமை

ஓரில்பொய்த் தோற்றமோ உளத்தின் மாற்றமோ

சேரிய பிறவியில் திரண்ட நல்வினை

சீரிய பயன்பயந் தொழிந்த செய்கையோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/141&oldid=1577273" இலிருந்து மீள்விக்கப்பட்டது