பக்கம்:மறைமலையம் 6.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

நானே என் கண்மணியை நீக்கிவிட்டது ஏன்?

113

விதூஷகன் : (தனக்குள்) எப்படி! பசியானது என்னை விழுங்கிவிடுவது போலிருக்கின்றதே!

அரசன்: என் அன்பே! ஏதொரு காரணமுமின்றி நின்னை நீக்கிவிட்டமை நினைந்து கழிவிரக்கத்தாற் றுன் புறுத்தப்படும் நெஞ்சினனான இவனுக்கு மீண்டும் நின் உருவைக்காட்டி அருள்புரியாயோ?

(சதுரிகை சடுதியில் திரையை விலக்கிக்கொண்டு கையில் ஓவியப்பலகை ஏந்தி வருகின்றாள்.)

சதுரிகை : ஓவியத்தில் எழுதப்பட்ட இளவரசி இதோ! (ஓவியத்தைக் காட்டுகின்றாள்.)

விதூஷகன் : நன்று! நன்று! ஓ நண்பரே! மயக்கத் தக்க வகையாய்ப் பொருள்களின் நிலையை வைத்து வரைந்த வ்வழகிய ஓவியம் பார்க்கத் தகுந்ததே. எழுதப்பட்ட பொருள்களின் மேடு பள்ள அமைதிகளைக் காண்கையில் என் பார்வையானது அவற்றில் தடுக்கி விழுவதுபோலிருக்கின்றது.

சானுமதி : துகிலிகை பிடிப்பதில் இவ்வரச முனிவரின் திறமை எவ்வளவு சிறந்ததாக இருக்கின்றது! என் தோழி எனக்கு எதிரில் இருக்கிறதாகவே நம்புகின்றேன்.

அரசன் : எவ்வெவை நன்றாயில்லையோ அவ்வற்றை ஓவியத்திற் சீர்திருத்திச் சிறப்பாய் எழுதுவதுண்டு; ஆனால் இவளது உருவ அழகோ மிகச் சிறிதாகவே இவ்வோவியத்தில் வரைந்து காட்டப்பட்டிருக்கின்றது.

சானுமதி : கழிவிரக்கத்தினாலே மிகுதிப் படுகின்ற அன்பும் செருக்கற்ற நடையும் உள்ளவிடத்து இங்ஙனஞ் சொல்வது இயற்கையே யாம்.

விதூஷகன் : நண்பரே! இங்கே பெருமையிற் சிறந்த மூன்று மகளிர் தோன்றுகின்றார்கள். இவர்கள் எல்லாரும் அழகாகவே இருக்கின்றனர்; இவருட் சகுந்தலை யார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/144&oldid=1577298" இலிருந்து மீள்விக்கப்பட்டது