பக்கம்:மறைமலையம் 6.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் -6

சானுமதி : பயனில்லாப் பார்வை வாய்ந்த இவன் என் தோழியின் பேரெழிலைப் பகுத்தறியக்

வாய்வதேயாம்.

அரசன் : நல்லது, நீ யாரைக் கருதுகின்றாய்?

வி

கூடாதது

விதூஷகன் இதோ இம்மாதரார் தாம் என்று கருதுகின்றேன்; நீர் பாய்ச்சப்பட்டதனால் நிறையத் தழைத்துப் பசுத்துத் தோன்றுங் கொழுவிய மாமரத்தின் அருகே, கட்டவிழ்த்து விட்டமையால் மலர்கள் உதிரப் பெறுகின்ற கரிய கூந்தலோடும், வியர்வைத் துளிகள் அரும்பிய முகத்தோடும் மிகத் துவண்ட பச்சிளந் தோள்களோடுஞ் சிறிது களைப்படைந்த வகையாய் எழுதப்பட்டிருக்கும் இவ்வுருவே சகுந்தலையாகும்; ஏனையோர் அவர்தம் தோழிகள்.

அரசன் : நீ திறமையுள்ளவன்றான். இதோ என் காதல் மிகுதியைக் காட்டும் அடை யாளம்! வியர்க்கும் என் விரல்களின் பதிவு இதன் விளிம்பில் அழுக்கடைந்து தோன்றுகின்றது! இதோ அவள் கன்னத்தின் மேல் விழுந்த என் கண்ணீரினை ஓவியத்தின் சாயஎழுச்சி புலனாக்கு கின்றது! ஏ சதுரிகே! பொழுதுபோக்காக எழுதின இவ் ஓவியம் இன்னும் முற்றுப்பெறவில்லை. நீ போய்த் துகிலிகையை எடுத்துவா.

சதுரிகை : ஐயா மாதவியரே ! யான் திரும்புமளவும் இவ் ஓவியப் பலகையைத் தாங்கிக்கொள்ளும்.

அரசன் : நானே அதனைப் பிடித்துக்கொள்கின்றேன். (அப்படியே செய்கின்றான்; சேடி போய்விட்டாள்.)

அரசன் : (பெருமூச்செறிந்து) ஆ நண்பா!

தானே வலிவிலென் பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு நானே படத்தி லெழுதுமிந் நங்கைக்கு நன்றுசெயல் மீனே பிறழப் பெருகுமொ ராற்றை விடுத்துவெய்ய

கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்குமன்றே.

விதூஷகன் : (தனக்குள்) இங்கே மன்னன் உண்மை யாகவே யாற்றைக் கடந்து கானல்நீரைச் சேர்ந்தவராகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/145&oldid=1577306" இலிருந்து மீள்விக்கப்பட்டது