சாகுந்தல நாடகம்
119
பிரதீகாரி : ஆம் பார்த்தேன். கையில் நான் கடிதத்தொடு வருதலைக் கண்டு அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள்.
அரசன் : கடமை யின்னதென அறிந்திருத்தலால், அரசியின் முறைகளில் எனக்கு இடைஞ்சல் உண்டாகுதலை அவள் விலக்குகின்றாள்.
பிரதீகாரி : எம்பெருமான், அமைச்சர் பின் வருமாறு வேண்டுகின்றார்: “பல துறையாக வரும் வரிவருவாய்க் கணக்குகள் நிரம்பவும் மிகுதியாய் இருத்தல்பற்றி, ஒரே ஒரு வழக்குத்தான் என்னால் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக் கின்றது; காட்டப்பட்டிருத்தலைக்
அஃது
இக் கண்ணுறுவீர்கள்.”
கடிதத்திற்
அரசன் : அக் கடிதத்தை இங்கே காட்டு.
(பிரதீகாரி அதனைக் கையிற் கொடுக்கின்றாள்.)
அரசன் : (அதனைப் படித்துப் பார்த்து) என்ன? கடலிற் சென்று வாணிகம் நடாத்துந் தனமித்திரன் என்னுஞ் சிறந்த வணிகர் கப்பல் உடைந்து இறந்து போயினாரென்றும், ரக்கப்படத்தக்க அச் செட்டியார்க்குப் பிள்ளையில்லை யென்றும், அதனால் அவரது களஞ்சியத்தில் உள்ள பொருள் முழுதும் அரசனுக்குச் செல்லல் வேண்டுமென்றும் அமைச்சர் எழுதுகின்றார். பிள்ளை யில்லாதிருத்தல் உண்மையிலே பரிவுறத் தக்க தொன்றேயாம்! ஏ வேத்திரவதி! பெருமையிற் சிறந்த அச் செட்டியார் பெருஞ் செல்லராதலால் அவர்க்கு மனைவிமார் பலர் இருத்தல் வேண்டும். அம் மனைவிமாருள் யாரேனுங் கருவுற்றிருக்கின்றனரா என்று உசாவுதல் வேண்டும் எனச்சொல்.
பிரதீகாரி : எம்பெருமான்! சாகேத நாட்டு வணிகர் ஒருவரின் மகளான அவர் மனைவி ஒருத்திக்கு இப்போது தான் சீமந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகக் கேள்வி.
அரசன் : நல்லது, கருப்பையிலுள்ள அப் பிள்ளைதான் தந்தை செல்வத்தைப் பெறுதற்கு உரிமையுடையது. நீ போய் இதனை அமைச்சர்க்கு அறிவி.