பக்கம்:மறைமலையம் 6.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் -6

நடந்ததைச் சொல்லி என்தோழியை ஆற்றுகின்றேன். (வானில் உயர எழுந்து போய்விட்டாள்.)

(திரைக்குப் பின்னே)

ஓ பார்ப்பானைக் காப்பாற்று!

ஓ பார்ப்பானைக் காப்பாற்று!

அரசன் : (உணர்வுற்றெழுந்து, உற்றுக்கேட்டு) ஓ! இந்த ஒலக்குரல் மாதவிய னுடையதுபோல் தோன்றுகின்றதே! யார் அங்கே?

(பிரதீகாரி வந்து)

பிரதீகாரி : (விரைவாய்) அண்ணலே! இடரில் அகப் பட்டுக்கொண்ட தங்கள் நண்பரைக் காப்பாற்றுங்கள்!

அரசன் : அச் சிறுவனை வருத்துகின்றவன் யாரடா?

பிரதீகாரி : கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தீய பேயானது அவரைப்பிடித்து மேகப்பிரதிச்சந்த அரண் மனையின் உச்சித்தளத்தின்மேற் கொண்டுபோய் வைக்கின்றது.

அரசன்

என்

வ்வாறு நடக்கவிடப்படாது. இருப்பிடத்திலுந் தீயபேய்கள் இயங்குகின்றனவா! ங்ஙனந்தான் சொல்வானேன்? ஒருவன் நாடோறுங் கருத்தின்மையால் தான் செய்கின்ற குற்றங்களைத் தானே தெரிந்து கொள்ளுதல் கூடாதபோது, என் குடிமக்களில் யார் எவ்வழியிற் செல்கின்றார்கள் என்று முற்றுந் தெரிந்து கொள்ளுதல் கூடுமோ?

(திரைக்குப் பின்னே)

ஓ நண்பரே! உதவிசெய்யும்! உதவிசெய்யும்!

அரசன் : (விரைந்து சென்று) நண்பா! அஞ்சாதே! அஞ்சாதே!

(திரைக்குப் பின்னே)

(முன் சொன்னதையே திரும்பச் சொல்லி) நான் எப்படி அஞ்சாதிருப்பேன்? இங்கே யாரோ ஒருவன் என் கழுத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/153&oldid=1577374" இலிருந்து மீள்விக்கப்பட்டது