சாகுந்தல நாடகம்
127
இந்திரன் இன்பம் நுகர்ந்தாங்கிருக்க, முன்பு நரசிங்கத் தினுடைய வளைந்த நகங்களும், இப்போது கணுக்கள் இழைப்புண்ட உம்முடைய அம்புகளும் அல்லவோ வானுலகத்தில் அரக்கரென்னும் முட்களைக் களைந்தெறிந்தன.
அரசன் : இதில் இந்திரனது பெருமையே உண்மையிற் புகழற்பாலது; ஏவலாளர் அங்ஙனம் பெரிய முயற்சிகளிற் புகுந்து வெற்றி பெறுவதெல்லாந் தம் தலைவனது நன்கு மதிப்பின் விளைவென்றே அறிமின்! ஆயிரங் கதிர்களொடு கூடிவிளங்கும் பகலவன் தனது தேர் நுகத்தின் முன்னே வையானாயின் அருணன் தானே இருளை அழிக்க
வல்லனாவனா?
மாதலி : இது நுமக்குத் தக்கதே தான்! (சிறிது வழி கடந்துசென்று) நீடுவாழ்வீர்! இதோ இத் துறக்க நாட்டின் கண் உமது புகழ் விளங்குதலைப் பார்மின்! இங்கே தேவர்கள் உம்முடை வெற்றித் திறங்களைப், பாடுதற்கு இசைவான பொருள் நிறைந்த பாட்டாகப் பாடித், தேவமாதர் அணிந்து மிஞ்சிய குங்குமம் முதலியவற்றைக் கொண்டு கற்பகமரத்தால் தரப்பட்ட படாத்திலே எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
அரசன் : ஐய மாதலி! நேற்றுநான் அரக்கரொடு போர் புரியச் சென்ற கிளர்ச்சியில் வானின்கண் எழும்போது த்துறக்கநாட்டின் இடங்களை வழியில் நோக்கிற்றிலேன். இப்போது வளிமண்டிலத்தின் எவ்விடத்தே வந்திருக் கின்றோம்?
வ
மாதலி : மூன்று பிரிவாய்ச் செல்லும் வான் கங்கையை யுடையதும், கதிர்களைப் பிரித்துவிட்டு வான்மீன்களை இயக்குவதும், திருமாலின் இரண்டாமடி பட்டமையால் எல்லாக் குற்றங்களும் நீங்கப் பெற்றதுமான இது பரிவகம் என்னும் வளிமண்டில மென்று சொல்லப்படும்.
அரசன் : ஐய மாதலி! ஆதலினாற்றான் அகக்கருவி புறக்கருவிகளொடு, கூடிய என் உயிரானது அமைதி உறுகின்றது. (தேர் உருள்களைப் பார்த்து) நாம் இப்போது புயல் மண்டிலத்தில் இறங்கிவிட்டோம் என்று நம்புகின்றேன்.