பக்கம்:மறைமலையம் 6.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

  • மறைமலையம் -6

மாதலி : அஃதெப்படித் தெரிகின்றது?

அரசன் : இவ்வுமது தேர், தன்னுடைய உருள்களின் விளிம்புகள் மழைத்துளிகளால் நனைந்திருத்தலாலுஞ், சாதகப்புட்கள் ஆர்க்கால்களினிடையே நுழைந்து செல்கின்ற மையாலுங், குதிரைகள் மின்னற் கொடியினொளியில் மினுமினுவென்று விளங்குதலாலுஞ், சூல்கொண்ட புயல் படில வழியாய்ச் செல்கின்ற தென்பது புலனாகின்றது.

மண்

L

மாதலி : இன்னும் ஒருநொடியில் நீர் நுமது ஆளுகையின் கீழுள்ள நிலவுலகத்திற்குச் செல்வீர்.

அரசன் : (கீழேபார்த்து) தேர் விரைவாய் இறங்குதலால் மக்களுலகமானது வியக்கத்தக்க தோற்றமுடைத்தாய்த் தோன்றுகின்றது.

ஓங்குவரை மேலிருந்த தாங்கிழி வதுபோல்

ஆன்றநில வுலகந் தோன்றுவது காண்மோ!

உயர்பெரு மரங்கள் வியன்கிளை தோற்றிச்

செழுந்தழை மறைப்பினின் றொழிவதூஉங் காண்மோ!

நன்குபுல னாகா இன்புன லியாறுகள்

அகன்றுநனி கிடத்தலிற் றுலங்குதற் காண்மோ!

இவ்வியல் பதனால் எழில்கெழுஉ மிவ்வுல

கியாரோ வொருவன் எழச்செய்

தீங்கென் பக்கல் இயைப்பது போன்மே.

மாதலி : நன்கு மொழிந்தீர்! (வியப்பொடு பார்த்து) ஆ! நிலவுலகம் எவ்வளவு சிறந்த அழகினதாய்த் தோன்றுகின்றது!

அரசன் : ஐய மாதலி!

மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருகவிட் டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும்

வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/159&oldid=1577425" இலிருந்து மீள்விக்கப்பட்டது