சாகுந்தல நாடகம்
131
மாதலி : பெரியோரின் அவாவானது மேன்மேல் உயர்ந்த பொருளை நாடிச் செல்கின்றது. (நடந்துபோய் வானை நோக்கி) ஓ முதுமை மிக்க சாகலியரே! மாட்சிமை நிறைந்த மாரீசர் யாது செய்து கொண்டிருக்கின்றார்? யாது சொல்கின்றீர்? இல்லறக் கிழத்தியின் கடமைகளைப்பற்றித் தாட்சாயணி கேட்ட வினாக்களுக்கு, அவ்வம்மையார்க்கும் மற்றை மாமுனிவரின் மனைவிமார்க்கும் விளக்கி சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றா சொல்கின்றீர்?
டை
அரசன் : (உற்றுக்கேட்டு) ஓ! இப்பொருளைப்பற்றி விளக்கிச்சொல்லும் இந்நேரத்தின் இடை செல்லலாகாது.
மாதலி : (அரசனைப் பார்த்து) நான் தேவேந்திரன் தந்தையாரிடத்து நேரம்பார்த்து நும் வரவை அறிவிக்கும் வரையில் நீர் சிறிது நேரம் இவ்வசோக மரத்தடியின்கீழ் இருக்கலாம்.
அரசன் : தங்கள் விருப்பப்படியே. (இருக்கின்றான்.)
(மாதலி போய்விட்டார்.)
அரசன் : (ஒரு நற்குறியைக் கண்டு) ஏ தோளே! நீ ன் துடி க்கின்றாய்? என் விருப்பம் நிறைவேறுமென்று நான் எதிர்பார்க்கவில்லையே! ஏனெனில், ஒருமுறை விலக்கப் பட்ட ஓர் இன்பமானது பின்பு திரும்பிவருதல் மிக அரிது.
(திரைக்குப் பின்னே)
அப்படித் துடுக்குத்தனம் செய்யாதே, செய்யாதே, என்ன, தன் இயற்கையின்படி இப்போதே நடக்கத் தொடங்கி
விட்டானே!
அரசன்
(உற்றுக்கேட்டு) இது து துடுக்குத்தனஞ் செய்தற்குரிய இடம் அன்றே. இங்கே யார் இவ்வகையாகக் கடிந்து கொள்ளப் படுகின்றனர்? (குரல்ஒலி வரும்வழியே வியப்பொடு பார்த்து) ஆ! தாயின் முலைக்காம்பைப் பற்றிப் பாதி குடித்த அரிமான்குட்டியை விரிந்து கிடக்கும் அதன் பிடரிமயிர் கலையும்படி முரட்டுத்தனமாய்ப் பிடித்து,