பக்கம்:மறைமலையம் 6.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

133

சிறுவன் : அஃதெங்கே யிருக்கின்றது? அதைக் கொடு. கையை நீட்டுகின்றான்.)

அரசன் : என்ன! வனும் மன்னர்மன்னற் குரிய அடையாளந் தாங்கப் பெற்றிருக்கின்றான். ஏனெனில், இவன் தான் வேண்டிய பொருளைக் கேட்டுக் கையை நீட்டு கையிற், சிவந்து விளங்கும் வி டியற்காலத்தில் அலர்ந்த ஒரு தனித்தாமரை மலரின் செவ்விதழ்களின் நடுவே இடைவெளி தோன்றாமைபோல இவன் கைவிரல்கள் நெருங்கி வலைபோற் பின்னலுற்றுப் பொலிகின்றன.

இரண்டாம் மாதர் : சுவரதே! வெறுஞ் சொல்லால் வனைத் தடுக்கமுடியாது. நீ போய், முனிவர் மகனான மார்க்கண்டேயனுடையதும் பலநிறந் தீட்டப்பட்டதுமான களிமண் மயில் என் குடிலில் இருக்கின்றது; அதனை இவனுக்காக எடுத்துவா.

முதல் மாதர் : அப்படியே! (போய்விட்டாள்.)

சிறுவன்

அதுவரையில் இதனொடுதானே யான் விளையாடிக்கொண் டிருக்கின்றேன். (துறவி மகளைப் பார்த்து நகைக்கின்றான்)

அரசன் : துடுக்குத்தனமுள்ள இந்தச் சிறுவனிடத்தில் மெய்யாகவே எனக்கு மிக்க அவா உண்டாகின்றது. (பெருமூச்செறிந்து) காரணமின்றி நகைக்கும்பொழுது சிறிதே தோன்றும் அரும்புபோலும் பற்களோடும், பேச முயல்கின்ற

னிய மழலைச் சொற்களோடும் மடிமீதிருக்க வருகின்ற தம் புதல்வர் மேலுள்ள புழுதி தம்மேற் படிந்து அழுக்காக்கப் பெறுகின்றவர்களே நல்வினையாளர்கள்!

இரண்டாம் மாதர் : இவன் நான் சொல்லுகின்றதைக் கேட்கின்றானில்லையே. (தன்பக்கமாய்ப் பார்த்து) அங்கே முனிவர்மகாரில் யார் இருக்கிறது? (அரசனைப் பார்த்து) ஐயா! அன்புகூர்ந்து இங்கே வந்து, பிடுங்கக் கூடாதபடி பிடித்து ந்த அரிமான் குட்டியைக் கசக்கி விளையாடும் இவன் கையினின்றும் இதனை விடுவியுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/164&oldid=1577468" இலிருந்து மீள்விக்கப்பட்டது