142
மறைமலையம் 6
அரசன் : (அருகிற் சென்று) இந்திரனுக்கு ஊழியக் காரனான துஷியந்தன் உங்களிருவரையும் வணங்குகின்றான்.
மாரீசர் : குழந்தாய்! நீ இந்நில வுலகத்தை நெடுங் காலங் காவல் புரிவாயாக!
அதிதி : குழந்தாய்! நீ நிகரற்ற போர்வீரனா யிருப்பாயாக! சகுந்தலை : என் புதல்வனோடும் உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன்.
மாரீசர் : குழந்தாய்! உன் கணவன் இந்திரனைப் போன்றும், உன்மகன் சயந்தனைப்போன்றும் இருக்கின்றனர்; ஆதலால், வேறுவகையான வாழ்த்துரை தக்கதன்று. நீ
இந்திராணியைப்போல் இருப்பாயாக!
அதிதி : குழந்தாய்! நீ நின் கணவனால் மிகவும் நன்கு மதிக்கப்படுவாயாக! நீடு வாழ்வானான நின்புதல்வன் இரு குடிக்கும் மகிழ்ச்சி தருவானாக! எல்லாரும் இருங்கள்.
(எல்லாரும் பிரஜாபதியின் இருமருங்கும்
இருக்கின்றனர்.)
மாரீசர் :(ஒவ்வொருவரையுங் குறித்துக் காட்டி) நல்வினைப் பயனாற் கற்பிற் சிறந்த சகுந்தலையும் உயர்குணத்திற் சிறந்த இப் புதல்வனும், நீயும், மனத்திட்பமும் நல்வினையும் விதிமுறையும் என்னும் மூன்றும் ஒருங்கு சேர்ந்தது போற்
கூடியிருக்கின்றீர்கள்.
அரசன் : தெய்வப் பெருமானே! முதற்கண் விழைந்தது கைகூடியது; பிறகு தங்களைக் காணக் கிடைத்தது; அதனால் தங்கள் அருள் உண்மையில் ஒப்பில்லாததாயிருக்கின்றது. என்னை? முதலில் மலர் தோன்றுகின்றது, அதன்பிற் கனி உண் ாகின்றது; முதலிற் கார் எழுகின்றது, அதன்பின் மழை மொழிகின்றது. இதுதான் காரண காரியமுறை, மற்று இங்கோ
தங்கள் அருளைப் பறுதற்கு முன்னரே நல்வாழ்வு
வரலாயிற்று.
ழ்கூட்டுவோர் இவ்வாறுதான் தமது
மாதலி தள அருளைக் காட்டுகின்றனர்.