பக்கம்:மறைமலையம் 6.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் -6

அவி - தேவருணவு. அதனைத் தீக்கடவுள் ஏற்றுத் தேவர் கட்குச் சேர்ப்பிப்பனென்பது பண்டையோர் கொள்கை. யமானன் - யஜமானன் என்னும் வடசொற்றிரிபு; வேள்வி வேட்கும் ஆசிரியன். இறைவன் எல்லா உயிர்கட்கும் உயிராய் இருப்பானாயினும், அவ் வுயிர்களுட் சிறந்த வேள்வி யாசிரியன்பால் முனைந்து நிற்றல்பற்றி இயமானனை ஈண்டு விதந்து கூறினார்.

கட்புலனாகாத ‘காலம்’ இன்னதென்பது கட்புலனாய் இயங்குகின்ற பகலவனும் வெண்மதியமும் என்னும் இரண்டின் இயக்கத்தாலன்றி அறியப்படாமையிற் 'காலத்தை வரையறுக் கின்ற ஞாயிறு திங்கள்' என்றார். பகலிரவுகளையும், பன்னிரண்டு திங்களையும், அறுபது ஆண்டுகளையும் பகுத்துணர்தற்கு இவ்விரண்டின் இயக்கம் இன்றியமையா தாதலை வான் நூலிற் காண்க.

விசும்பு - வான்: இடைவெளி ; ஓசை உலவுதற்கு இடங் காடுத்து நிற்பது. உயிருள் பொருள் உயிரில் பொருள் களாகிய எல்லாம் நிலனும் நீருந் தீயுங் காற்றும் வானும் ஞாயிறுந் திங்களும் உயிரும் என்னும் எட்டில் அடங்குதலின், எல்லாம்வல்ல இறைவன் இவற்றை இயக்குதற்பொருட்டும் அறிவித்தற் பொருட்டும் இவற்றின் கண் நிற்பனென்றார்.

நிறைந்து

வேதங்கள் தொகுக்கப்பட்டுப் பிராமணங்களும் பழைய பன்னிரண்டு உபநிடதங்களும் வரையப்பட்ட பண்டை காலத்தே சிவபெருமான் ஒருவனே முழுமுதற் கடவுளாக வணங்கப் பட்டனன். இவ் வுண்மை வுண்மை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது நூலிற் கண்டுகொள்க. காளிதாசர் பிற்காலத்தெழுந்த புராண முறையைத் தழுவாது, முற்காலத்ததாகிய வேத முறையைத் தழுவுதலிற் சிவபெருமான் ஒருவனையே முழுமுதற்கடவுளாக வைத்து வாழ்த்துரை கூறுவாராயினர். இங்ஙனமே இவர்தான் இயற்றிய 'விக்கிரமோர் வசீயம்' என்னும் நாடகத்தின் முகத்தும், ‘மாளவிகாக்நிமித்திரம்' என்னும் நாடகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/179&oldid=1577594" இலிருந்து மீள்விக்கப்பட்டது