பக்கம்:மறைமலையம் 6.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

149

முகத்துஞ், சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரைத்தல் காண்க.

'கோலச்சாலை' என்பது நாடகம் ஆடுவோர் தாந்தாம் பூணுதற்குரிய கோலங்களைப் பூணும்பொரு ாருட்டு நாடக அரங்கின் உட்பக்கத்தே வகுக்கப்பட்ட ஓர் இடம். ஒப்பனை- அலங்காரம். நங்கை - பெண்களிற் சிறந்தாள்.

நடி' என்பவன் சூத்திரதாரனுக்கு உதவியாய் நாடக அரங்கில் நின்று பாடி நாடக நிகழ்ச்சிக்குத் தோற்றுவாய் செய்பவன். இச் சாகுந்தல நாடகத்தில் மட்டும் இம் முன்னுரையில் இங்ஙனம் ஒரு மாது தோன்றுகின்றாள். காளிதாசர் இயற்றிய ஏனை இரண்டு நாடகங்களிலும் ஓர் ஆடவன் உதவியாளனாய்த் தோன்றதல் காண்க.

அரங்கம் - நாடகமேடை.

(பக்.3) நடிப்பு கூத்து, மாதராய் பெண்ணே. இசை பாட்டிசை. துய்த்தல் - அனுபவித்தல். ஏற்றது - இசைந்தது. வேனிற்காலம் - வெயிற்காலம். முகிழ் - அரும்பு. அளைந்து- குடைந்து நறுமணம் - நல்லவாசனை. கானகம் - காடு. அடர்ந்த - நெருங்கிய.

(பக். 3) அயர்ந்த துயில் - தன்னை மறந்த தூக்கம், மாலைக் காலம் - சாய்ங்காலம்.

(பாட்டு) விரியுமண

காணாய்

இதன் பொருள் : விரியும் மணம் அவிழ்க்கும் - எங்கள் பரவாநின்ற மணத்தை அவிழச்செய்யும்; மலர்முகிழ்மேல் எல்லாம் - பூவரும்புகளின் மேலிடங்களை எல்லாம், கரிய வரிவண்டு -கரிய நிறமும் இறக்கைகளில் வரியும் உடைய வண்டுகள், முத்தம் இடல்காணாய் - முத்தம் இடுதலை ஒப்ப வாயால் தொடுதலைப் பார்ப்பாயாக, எரியும் தளிர்ப்பிண்டி ணர்கிள்ளி - தீ எரிவதனை யொப்பச் சிவந்து தோன்றுந் தளிர்களையுடைய அசோகமரத்தின் பூங்கொத்துகளைக் கிள்ளி, ஓடும் கரியவிழி மாதர் - காதளவும் ஓடாநின்ற நீண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/180&oldid=1577602" இலிருந்து மீள்விக்கப்பட்டது