பக்கம்:மறைமலையம் 6.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 6

கரிய கண்களையுடைய மடந்தையர்,காது, செருமலும் காணாய் - தம்முடைய காதுகளிற் செருகுதலையும் பார்ப்பாயாக.

பனிக்காலத்தே இலையுதிர்ந்த மரஞ்செடி கொடிகள் வெயிற் காலத்தே புதிது தளிர்த்து அரும்பு கட்டுதலும், அவ் வரும்புகளில் உள்ள தேனைப் பருகுதற் பொருட்டு வந்த வண்டுகள் அவற்றைக் குடைதலும், அதனால் முறுக்கு அவிழ்ந்த அவ் வரும்புகளிலிருந்து நறுமணம் புறந்தோளில் வீசுதலும், அப்போது அழகிய மாதர்கள் அசோகமரச் சோலைகளிற் புகுந்து அதன் பூங்கொத்துகளைப் பறித்துக் காதுகளிற் செருகித் தம்மை ஒப்பனை செய்துகொண்டு விளையாட்டயர்தலும் இயற்கையாய் நிகழ்தலின் அவ் வேனிற்கால அழகினை நடி என்பாள் இங்ஙனம் புனைந்து பாடுவாளானாள்.

அடுத்துவருங் கதைநிகழ்ச்சியினையும் நடி இப் பாட்டின் கட் குறிப்பிட்டுக் காட்டுதலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. அரும்புகள் தேனையுடையவாய் முகிழ்த்துத் தோன்றத், தொலைவிலுள்ள வண்டுகள் அவற்றின் பதம் அறிந்துவந்து, அவற்றின் கட்டை நெகிழ்த்துத் தேன்பருகும் முயற்சியினைத் தொடங்குதல் போலக், கானகத்திலுள்ள சகுந்தலை யென்னும் மங்கை தன் அழகு நலம் நிரம்பிக் காதலின்ப நுகர்ச்சிக்குரிய பதம் வாய்ந்தனளாய் இருப்பத், தொலைவில் நகரவாழ்க்கை யிலுள்ள துஷியந்தன் என்னும் மன்னன் ஊழ்வினை கூட்ட அக் கானகத்திற் புகுந்து அவடன் காதலின்பத்தினை நுகர்ந்து செல்வனென்பது குறிக்கப்பட்டமை காண்க.

அசோகந்தளிர்கள் பூங்கொத்துகளை மாதர் காதிற் செருகியாடும் வழக்கம் வடநாட்டிலே மட்டுமன்றிந் தமிழ்நாட்டிலும் உண்டென்பது, "வண்காது நிறைந்த பிண்டியொண்டளிர், நுண்பூணுகந் திளைப்ப திருழருகாற்றுப்படை (வரி 31, 32) யினுங் கூறப்பட்டமை கொண்டுணரப்படும்.

குழு கூட்டம். ஓவியம் - சித்திரம்.

-

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/181&oldid=1577610" இலிருந்து மீள்விக்கப்பட்டது