சாகுந்தல நாடகம்
153
வரிசை - முறைமை. ‘சோமதீர்த்தம்' என்பது கத்தியவாரில் உள்ள சோமநாதம் என்னும் சிவபிரான் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளதொரு திருக்குளம், தக்கன் கூறிய தீமொழியாற் கயநோய் கொண்ட சந்திரன் என்பான் இத் திருக்குளத்தில் முழுகிச் சிவபிரானை வணங்கி அநநோய்தீரப் பெற்றமையால், அஃது அப்பெயர்த்தாயிற்று. இனித், துருவாசர் கூறுந் தீமொழியாற் சகுந்தலைக்கு நேர இருக்குந் தீமையினை ஒழித்தற் பொருட்டாகவே, அதனை முன்னுணர்ந்து கண்ணுவமுனிவர் சோமநாதத்தற்குச் சென்றனர். இதனால் இவர் திரும்பி வருதற்குச் சில திங்களாவது கழியுமாதலாற், சகுந்தலையுந் துஷியந்தனுங் காதலின்பத்திற் றிளைத்திருத்தற்கு வேண்டிய அளவு அமைதியான காலம் அங்குள தென்பதனைக் காளிதாசர் இங்கே குறிப்பித்தாரென்பதுணரற்பாற்று.
இயற்றும் - செய்யும், வழிபாடுகள் - வணக்க முறைகள். மொழிதல் - சொல்லல். தூயது பரிசுத்தமானது. கறை - குற்றம்.
(பக்.8) முடுகுதல் பேட்டு இளங்கிளிகள் வசிக்கின்ற.
-
-
-
ஓட்டுதல்.தெற்றென ஒட்டுதல். தெற்றென - தெளிவாக,
இளைய பெண்கிளிகள். உறைகின்ற -
இங்குதி' ஒருவகை மரம். நெய்ப்பற்று -நெய்ப்பசை, சிதர்ந்து - சிந்தி. மிளிர்தல்-ஒளிசெய்தல். சொட்டுதல் துளித்தல். சிற்றலை - சிறிய அலை. கற்றை-தொகுதி. அலைசல்- அலைதல், திகழும் விளங்கும். வேட்கும் - வேள்வி செய்யும் புல்வாய்க்கலை - ஒருவகை மான், புற்கறித்து-புல்லைக்கடித்து.
(பக். 9) உடை நிமித்தம்
-
-
உடை டைமை, அணிகள் - ஆபரணங்கள்.
குறி, ஓர் ஆண்மகனுக்கு வலது தோள் துடிப்பது அவன் ஓர் அழகிய பெண்ணைக் கூடப் போவதனை முன்னறிவிக்குங் குறி என்பர். ஊழ்வினை வயத்தால் இனி நடக்கப் போவன கூற்றைத் தடைசெய்வன எவையும் இல்லை என்ற கருத்தைத் துஷியந்தன் “இனி நிகழ வேண்டுவன வாயுள்ள நிகழ்ச்சிகளுக்கு எவ்விடத்துங் கதவுகள் இருக்கின்றன” என்னுஞ் சொற்றொடராற் கருதுகின்றான்.