பக்கம்:மறைமலையம் 6.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

-

மறைமலையம் -6

அண்டை அயல், உரையாடும் - பேசும்.

-

-

-

(பக்10) முல்லை - மணங் கமழும் பூக்களையுடைய ஒரு கொடி.உ வளகம் அந்தப்புரம், அரசர் முதலிய செல்வக் குடியினரின் மகளிர்மட்டும் இருக்கும் மனை. இளங்கா இளமரச் சோலை, பின் இடைதல்-பின்வாங்குதல், அஃதாவது தோற்றல். வாய்வது பொருந்துவது, நாகரிகம் வாய்ந்த செல்வரின் அரண்மனைகளில் உள்ள மாதர்கள் அங்கே தமக்குச் செய்யப்படும் இனிய மென்முறைகளால் அழகு மிக்குத் தோன்றுதற்கு, ஏவலாட்களாற் பேணி வளர்க்கப் படும் இளங்காவின் பூங்கொடிகளையும்; கானகத்திலுள்ள ஏழை மகளிர் அங்ஙனம் பேணி வளர்க்கப்படாதிருந்தும் அவர்கள் இயற்கையழகிற் சிறந்து தோன்றுதற்கு, மக்கள் எவரானும் போற்றப்படாமலே இயற்கையிற் செழுமையாக வளர்ந்து நறுமணங் கமழுங் காட்டுப் பூங்கொடிகளையும் அரசன் உவமையாகக் கருதினான் என்க.

-

அகழ்ந்த அகழ்ந்த

கருதுகின்றேன் எண்ணுகின்றேன். புதிது அவிழ்ந்த புதிதாக அவிர்ந்த -தோண்டிய, ஏவுதல் வேலையிடுதல்.

'என்னை வியப்பினைக் காட்டுஞ்சொல், மாட்சிமை தவப் பெருமை செயற்கை - செய்ம்முறைகள்.

-

-

-

(பக்.11) கனிந்த முதிர்ந்த, இசைவித்த - பொருத்திய குவளைமலர் மென்மையான ஒருவகை நீலப்பூ. இதழ் விளிம்பு பூ இதழின் ஓரம். விறகுக்காக வளர்ந்த செடி மிகவும் வன்மையடையதாயிருத்தற்கும், நீலப்பூவின் இதழ் மிகவும் மென்மையுடையதாயிருத்தற்கும் உவமை. விறகுக்குப் பயன்படும் வன் செடியினை வலிய இருப்புக் கத்திகொண்டு வெட்டல் வேண்டுமேயன்றி மெல்லிய குவளைப்பூவின் இதழ் கொண்டு அறுக்கத் துணிதல் பேதைமையாம். அதுபோற், கொடிய தவத்தொழில்களைப் புரிதற்கு வல்லென்ற யாக்கை வாய்ந்தவர்களே தக்கவரல்லால், மெல்லிய எழிலுடம்பு வாய்ந்த சகுந்தலை தக்கவள் அல்லள் என்றான்.

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/185&oldid=1577644" இலிருந்து மீள்விக்கப்பட்டது