சாகுந்தல நாடகம்
நெய்த ஆடை. கொங்கை
-
155
மரவுரியாடை-மரத்தினின்றும் உரித்தெடுத்த நாரினால் முலை. நெகிழ்த்தல் - தளர்த்தல் புடைத்தல் - வீக்குதல். கடிந்துகொள் - சினந்துகொள். இழை - - மெல்லிய நூல்; சரடு.
-
பரிய -பருமையான, பொதிந்து - மறைத்து, வெளிறிய- வளுத்த, புற இதழ் - பூவின் வெளிப்புறத்தே ஒட்டியுள்ள பசிய தழ். புனைந்த அழகாய்ச் செய்த. மூடி - மேல் மூடுங் கருவி. முகிழ் - முகை. எழில் - மிகுந்த அழகு. புலப்படுதல் - விளங்குதல், ஆண்டு - வயது. அணிகலன்கள் - நகைகள். சடைப்பாசி- மயிர்க்கத்தையை யொத்த நீர்ப்பாசி. வெண் திங்கள் வெண்மையான சந்திரன். களங்கம் - கறை. மெல் இயல் மென்றன்மை வாய்ந்த பெண்.
-
(பக் . 12) கவர்ச்சி மனத்தைத் தன்வயப்படுத்துந் தன்மை. தாமரைமலர் விரியாமற் கொழுமுகையாய் இருக்கும் பதத்திற் குவிந்த அதன் அக இதழ்களின் அழகு வெளியே தெரியாதபடி அதனை யொட்டிப் பசிய புறஇதழ்கள் மறைத்திருத்தல் போலச், சகுந்தலை தன் பருங் கொங்கைகளின் எழில் கட்புலனாகாதபடி அவற்றின் மேற் கட்டப் பட்டிருக்கும் மரவுரியாடை அவற்றை மறைக்கும் என்றான். இன்னும், பாசிபடர்ந்த குளத்தின் டையிடையே காணப் படினுந் தாமரை மலர்கள் அதனால் தம் அழகு குன்றாமல். மிகுந்து விளங்குதல் போலவும், வெள்ளிய சந்திரன் தன்னகத்தே களங்கமுடையதா யிருப்பினும் அதனாற் றன் அழகொளி குன்றாமல் மிகுந்து திகழ்தல் போலவும், அழகற்ற மரவுரியாடை சூழ்ந்திருப்பினுஞ் சகுந்தலையின் மேனியழகு மிகுந்தே தோன்றுமென்றான்.
-
தேமா இன்சுவை மிக்க பழங்களைத் தரும் மாமரம், தென்றல் - தெற்கேயிருந்து வீசும் மெல்லிய காற்று; இது வேனிற் காலத்தேதான் வீசும், மாந்துளிர்கள் மகளிர் விரல்களை யொப்பச் சிவந்திருத்தலால், அவற்றின் அசைவு தன்னை அழைப்பதுபோல் தோன்றுகின்றதென்றாள் சகுந்தலை. பால் டம்
-
இட
-