பக்கம்:மறைமலையம் 6.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் -6

பிணைந்திருப்பது - இணைந்திருப்பது.

சகுந்தலையும் அவடன் தோழிமாரும் இவ்வாறு பேசிக் கொண்டு உலவுதலை மரச்செறிவில் மறைந்திருந்து நோக்குந் துஷியந்தன் சகுந்தலையின் அழகைத் தனக்குள் வியந்து சொல்கின்றான்.

கட்டு இளமை - உடம்பின் முறுக்கு நெகிழாத இளமைப் பதம். இவ் வ் விளமைப்பதம் சகுந்தலையின் ஒவ்வோர் உறுப்பிலும் (அவயவத்திலும்) அரும்பித் தோன்றுகின்ற தென்றான்.

-

வனஜ்யோத்ஸ்நா'

என்னும்

வடசொற்றொடர் பாகதத்தில் ‘வனதோசினி' எனத் திரிந்தது! அது 'கானகத் திற்கு நிலவொளி' எனப் பொருள்படும்; ஆதலால், அது கான்மதியம்' எனத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது; கான் காடு, மதியம் - நிலா, மல்லிகைக் கொடியின் மலர்கள் மிக வெள்ளியவாய் இருத்தலால், அக் கொடி முழுதும் அலர்ந்த பூக்களுடன் தோன்றுகையில், அது நிலவொளியை யொத்துக் காணப்படுதல் பொருத்தமே யாம். தேமாவின் அண்டையில் நிற்கும் மல்லிகைக் கொடியை அத் தேமாவிற்கு மணமகளாகக் கூறினான். இதனைப் பின்னே நான்காம் வகுப்பிலும், இரகுவம்சத்திலும் (8, 14) அடுத்தடுத்துக் கூறுவதலாற், காளிதாசர்க்கு இவ் வியற்கைத் தோற்றத்தில் மிகுந்த விருப்பு உண்டென்பது அறியப்படும்.

(பக். 13) புத்தம்புதிய -மிகப்புதிய. தழைகள் இலைகள்.

-

தழைத்த

ஐயம் -சந்தேகம். காதல் - பேரன்பு; ஒருவரையொருவர் உயிராய்க் கருதியுருகும் அன்பின் பெருக்கு. விழைதல் விரும்புதல்.

(பக்.14) கலைக்கப்பட்ட ஓட்டப்பட்ட

-

-

கடை - கடைசி. விழி -கண். செவி - காது. மறைபொருள்- இரகசியச் செய்தி. ஓதுதல் சொல்லுதல். வெருட்டுதல் ஓட்டுதல். கருவூலம் - பொக்கிஷம். கீழ் இதழ் - கீழ் உதடு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/187&oldid=1577661" இலிருந்து மீள்விக்கப்பட்டது