பக்கம்:மறைமலையம் 6.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

159

குசன்

'கௌசிக்குலம்' என்பது மதிகுலத்தவனான அல்லது குசிகன் என்பவனைத் தலைவனாய்க் கொண்டகுலம் என்பது. அக் குலத்திற் பிறந்த அரசமுனிவர் என்றது விசுவாமிதிரரை.

தன்னந்தனியே - மிகவுந்தனியே.

(பக். 19) ஏவினர் - தூண்டினர்.

நூறு வேள்விகள் வேட்டொருங் கடுந்தவம் புரிந்தோரும் இந்திர வாழ்க்கையை மறுமையிற் பெறுவரென்பது புராணக் கூற்று. அங்ஙனம் இந்திர வாழ்க்கையைப் பெறுதற்கு வருவோர் முன், பழைய இந்திரன் தன் நிலையைத் துறந்து செல்லல் வேண்டுமாகலின், அவ்வாறு அவன் தன் வாழ்க்கை யினை இழவாமைப் பொருட்டு, வேள்வி செய்வார் முயற்சி களையுந் தவம் புரிவார் நிலைகளையுங் குலைப்பனென்று புராணங்கள் கூறும். அரம்பைமாது - தெய்வப்பெண்.

இளவேனிற்பருவம்' என்பது சித்திரை வைகாசித் திங்களில் நடைபெறும் வெயிற்காலம். இயல்பிற்று தன்மையினையுடையது. அரைவாசி - அரைப்பங்கு.

-

-

மகளிர் பெண்கள். வனப்பு - அழகு. மிளிர்தல் ஒளிவிடுதல். நிலவரைப்பு நிலஎல்லை. பேரொளி வீசும் மின்னற்கொடி நிலத்திலன்றி வானில் தோன்றுதல்போல, இந் நிலவுலகத்து மங்கையர்பாற் காணப்படாத அத்தனைப் பேரழகு வாய்ந்த சகுந்தலை ஒரு தேவமாதின் பாற்றான் தோன்றினாளாகல் வேண்டும் என்றான்.

சகுந்தலை அரசமுனிவராகிய விசுவாமித்திரர்க்கு மேனகை என்னும் அரம்பை மாதின்பாற் றோன்றினவ என்னும் உண்மை அறிந்த அளவில், அரசனாகிய தான் அவளை மணத்தல் தகும் எனக் கருதித் துஷியந்தன், ‘என் காதல் இப்போது இடங்கண்டது’ என்று தனக்குட்

-

கூறிக்கொண்டான்.பகடி பரிகாசம்.

-

(பக். 20) வேட்கை - ஆசை. மீதுஊர்தல் தாழாதீர் தாமதியாதீர்.

சை. மீதுஊர்தல் மேற்படுதல்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/190&oldid=1577673" இலிருந்து மீள்விக்கப்பட்டது