பக்கம்:மறைமலையம் 6.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் -6 *

காமவேள் - மன்மதன். 'வைகாநச விரதம்' என்பது மணவாழ்க்கையினை விரும்பாது, துறவு வாழ்க்கையினை விரும்பினாராற் கைக்கொள்ளப்படுவது; இந் நோன்பினை வகுத்தவர் 'விகாநசர்' என்னும் முனிவராதலால் அது வைகாநசம் எனப் பெயர் பெற்றது.

ன்

'பேட்டிளமான்களு கூடித் தன் வாழ்நாள் எல்லையளவுங் காலங் கழிக்கப்போகின்றனளோ?' என்றரசன் வினாயது, சகுந்தலை முன்சொன்ன வைகாநச நோன்பினைக் கைக்கொள்ளாது விடினும், மணம்புரியாது பிரமசாரிணியா யிருக்கப் போகின்றனளோ என்பதனை ஐயுற்று வினாவிய தாகும்.

மணவாளன்' என்பது மணம் ஆளன் எனப்பிரிந்து மணத்தை ஆள்பவன் அல்லது மணஞ்செய்து கொள்பவன் எனப் பொருடரும். புரிவித்தல் செய்வித்தல்.

-

-

-

(பக். 21) ஐயை - தலைவி; ‘ஐயன்' என்பதற்குப் பெண்பால். இடக்கர் - சொல்லத் தகாதது. புறக்கணித்தல் - பராமுகஞ் செய்தல். பற்றிக்கொள்ளல் பிடித்துக் பிடித்துக் கொள்ளல். முறை ஒழுங்கு. இருந்தவாற்றால்-இங்ஙனம் ங்ஙனம் உள்ளவகையால். இருக்கை - இருக்குமிடம்: ஆசனம்.மீண்டவன் - திரும்பினவன். சகுந்தலை அரசனை விட்டுச் செல்கையில், அவனது மனமும் அவளுடனே சென்று அவளைப் போகாமல் தடைசெய்ய விரும்பியும், அஃது ஒழுங்கு அல்லாமையால் அவன் தன் மனத்தைத் தன்பால் வருவித்துக் கொண்டான் என்றபடி.

புருவத்தை நெறித்து புருவத்தை வளைத்து, ஊற்றல் -

பெய்தல்.

-

(பக். 22) வலுக்கட்டாயம் - பலவந்தம். சோர்தல் தளர்தல். செக்கச்சிவத்தல் - மிகச் சிவத்தல். 'நெட்டுயிர்ப்பு': நெடு உயிர்ப்பு எனப் பிரிந்து நீண்ட மூச்சு அல்லது பெருமூச்சு எனப் பொருள்படும். பிண்டிமலர் அசோகம்பூ. நுண்டுளி - சிறுதுளி கருங்குழல் கரியகூந்தல். கணையாழி - திரண்ட வட்டம், அஃதாவது மோதிரம். 'வெறித்துப் பார்த்தல்’ புதுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/191&oldid=1577674" இலிருந்து மீள்விக்கப்பட்டது