162
மறைமலையம் 6
போலச், சகுந்தலை மேற் பெருங்காதல்கொண்டு அக் காதல் வழியே ஓடுந் தன் உள்ளத்தை அதனினின்றுந் திருப்புதல் தன்னால் இயலவில்லை யென்று அரசன் எண்ணுகின்றான். பஞ்சாடையைவிட மிக மெல்லியதாதலாற் பட்டாடை காற்றில் எளிதிற் பறக்கு மென்பது பற்றி, அதனையே கூறினார்.
இரண்டாம் வகுப்பு
.
(பக். 26) இவ்விரண்டாம் வகுப்பில் வரும் நாடகக் கதை நிகழ்ச்சி இது: துஷியந்தமன்னன் தன் பாங்கனாகிய மாதவியன் என்னும் விதூஷகனிடத்தில் தான் சகுந்தலை மேற் காதல்கொண்ட மையினை எடுத்துரைத்து அவனது உதவியைப் பெற முயல்கின்றான். இதற்கிடையே அவன் தன்னுடன் வேட்டமாட வந்த படைகள் தனது காதல் நிறைவேற்றத்திற்கு இடையூறாகுமெனக் கருதிப், படைத் தலைவனை வருவித்துப் படை களைத் தன் நகரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கட்டளை தருகின்றான். அங்ஙனமே படைத் தலைவன் படைகளைக் கூட்டிச் சென்றபின், அரசன் தன் பாங்கனுடன் தனித்திருந்து சகுந்தலைமேற் றான்கொண்ட காதலை வெளியிடுகின்றான். அதுகேட்ட மாதவியன் அரசன் பொண்ட அக் காதல் தக்கதன்றென முதலில் மறுத்துச் சொல்கின்றான். அதன்மேல் அரசன் சகுந்தலையின் எழில்நலங்களை விரித்துரைப்ப அவன் அவைதம்மை வியந்து, அரசன் அவள்மேற் காதலுற்றது போல அவளும் அரசன்மேற் காதலுற்றனளா வென ஆராய்கின்றான்.பின்னர், அரசன் தான்
எ
6
ல
மீண்டுந் துறவாசிரமத்துட் சென்று சகுந்தலையைக்
க
காண்டற்கு வழி யாது என்று சூழ்ந்து கொண்டிருக்கையில், முனிவர் புதல்வர் இருவர் அரசன்பாற் போந்து, முனிவர் வேட்கும் வேள்விக்கு அரக்கர்களால் தீது நேராமைப் பொருட்டு அவ் வேள்விக்களத்தைக் காத்துக்கொண்டு துறவாசிரமத்திற் சில இரவு தங்கல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றனர், இதுகேட்ட மாதவியன் சகுந்தலையைக் காண்டற்கு வாயில் கிடைத்தமையினை அரசற்கு மறைவிலே குறிப்பிக்கின்றான். அரசனும் அவரது வேண்டுகோளுக்கு