பக்கம்:மறைமலையம் 6.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் -6 *

சுட்டுவது.

உதோ’ என்பது எதிரிலிருப்பதைச் வெதுவெதுப்பு - இளஞ்சூடு. அருந்தல் - உட்கொள்ளல்.

“இருப்புக்கம்பியிற் கோத்துக் காய்ச்சிய இறைச் சியையே பெரும்பாலும் வேளைதப்பிய வேளையில் உண்டு வருகின்றறோம்" என்று பார்ப்பனனாகிய மாதவியன் கூறுதலை ஆராயுங்கால், அஞ்ஞான்றிருந்த பார்ப்பனர் வழக்கமாய் ஊனுணவு கொண்டுவந்தமை புலனாம். தமிழ் நாட்டின்கண் அந்நாளில் இருந்த கபிலர் என்னும் அந்தணர்பெருமான் தாம் ‘சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை' நோக்கிப் பாடிய செய்யுனிற்,

புலவு நாற்றத்த பைந்தடி

பூ நாற்றத்த புகைகொளீஇ ஊன்துவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலின் நன்று மெல்லிய பெரும தாமே நல்லவர் ...

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.

(புறநானூறு, 14)

என்று தாம் ஊன்உண் வாழ்க்கையில் இருந்தமையினைக் குறிப் பிடுதல் காண்க.

-

மூட்டு பொருத்து. உராய்தல் அயர்ந்து - தன்னைமறந்து. சிலந்தி - பரு.

உரைதல்; தேய்தல்.

(பக். 27) “இன்றுங்கூட அவன் இப் பெண்ணைப்பற்றிய நினைவில் ஆழ்ந்திருக்கும்போதே, அவன் கண்கள் பொழுது விடியக்கண்ட ன என்னுஞ் சொற்றொடர், அரசன் சகுந்தலையின் எழில் நலங்களிலேயே தன் உள்ளம்

""

பதியப்பெற்றமையால், அவன் அன்றிரவு முழுதும் கண்ணுறங்கிற்றிலன் என்னும் பொருளைத் தருவதாகும்.

என்பது

யவனப் பணிப்பெண்கள் - யவன நாட்டிலிருந்து வந்து ஏவல் வேலை செய்யும் மகளிர். ‘யவனம்’ கிரேக்கநாட்டின் ஒரு பகுதி. ஐயோனியா’

என்னுங்

கிரேக்கமொழிச் சொல் ‘யவனம்' எனத் திரிந்தது. இந்திய

நாட்டு மன்னர்கள் தம்முடைய அம்பையும் அம்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/195&oldid=1577678" இலிருந்து மீள்விக்கப்பட்டது