பக்கம்:மறைமலையம் 6.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 6

யிலுள்ள துறவோர் குடியில் வந்துசேர்ந்தமைக்கு உவமையாக மொழிந்திட்டாரென்க.

காணிற் சுழறலை அப் பெண்மணியை நீ காணின் இங்ஙனம் என்னை இடித்துப் பேசாய், மென்தோள் கரும்பினைக் கண்டிலை - ஆதலால் மெல்லிய தோள்களை யுடைய கரும்பையொத்து இனியாளை நீ கண்டாயல்லை யென்பது உணரப்படும். இங்கே காளிதாசர் வரைந்த சொற்றொடரொடு முழுதொத்திருந்தமையின், மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவை யாரிற் “சேணிற்பொலி" என்னுஞ் செய்யுளினின்றும் எடுத்து, இவ் அடி இங்கே சேர்க்கப்பட்டது.

வியப்பு - அதிசயம் : இறும்பூது. கவர்ச்சி - மனத்தைத் தன் வயப்படுத்தும் ஆற்றல்.

(பாட்டு) ஓவியமாக.

புதுமையன்றே?

-

இதன் பொருள் : ஓவியம் ஆக -சித்திரத்திலுள்ள ஓரழகிய வடிவமாக, எழுதிய பின்னை - வரைந்தபிறகு, ஒரு முதல்வன் - ஒப்பற்ற தலைவனாகிய நான்முகக்கடவுள், ஆவிபுகுத்தி அவ்வடிவத்தி னுன்னே உயிரை நுழைத்து, விடுத்தனனோ அதன்பின் அவளை இந் நிலவுலகத்திற் பிறப்பித்தனனோ, அன்று - அன்றி, அழகை யெல்லாம் ஒவ்வோர் உறுப்புகளின் அழகுகளையெல்லாம், தாவி -மனத்தாற் பரந்து ஆராய்ந்து, திரட்டினனோ - ஒருங்கு சேர்த்துச் செய்தனனோ, அவன்தன் வலிவும் - நான் முகனது படைப்புத் தொழிலின் திறமும், பூவை உருவும் - கிளியை யொத்தாளின் உருவச்சிறப்பும், நினையின் - ஒப்பவைத்து நினைப்பின், பொன்னாள் இலக்குமியைப் போன்ற சகுந்தலை, ஓர் புதுமையன்றே - இதுகாறும் எங்குங் காணப்படாத ஒரு வியத்தகு படைப்பன்றோ என்றவாறு.

(பாட்டு) மோவா மலரோ

தையலரே

(பக். 35) இதன் பொருள் : செய்த நல்தவங்கள் - மேலைப் : - பிறவிகளிற் செய்த நல்ல தவத்தின் பயன்கள், தாவாது அழியாமல், ஒருங்கு திரண்டு வந்தால் அன்ன - ஒன்று சேர்ந்து ஓர் உருவாய்த் திரண்டு வந்ததையொத்த, தையலர்

-

ம்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/199&oldid=1577682" இலிருந்து மீள்விக்கப்பட்டது