சாகுந்தல நாடகம்
171
(பக். 39) கட்டளை - உத்தரவு. இழைத்தல் - செய்தல். வேண்டுகோள் - மன்றாடிக் கேட்டல்: பிரார்த்தனை. நயம் இலாபம்: பலன். இடர் துன்பம். உற்றவர் அடைந்தவர்.
தீக்கை -விரத உறுதி.
(பக். 40) செய்தி -சமாசாரம்.
-
(பக் . 41) கிரியை - விரதச் சடங்கு. நோன்பு அலுவல் - வேலை. வழுவுதல் - தவறுதல்.
-
விரதம்.
'திரிசங்கு' என்பான் சூரியகுலத்தவனான அரிச்சந்திரன் என்னும் மன்னனுக்குத் தந்தையாவன். இவன் தன் உடம்பொடு துறக்கஞ் செல்லுதற்கு விழைந்து, அதனைத் தன் குலகுருவான வசிட்ட முனிவர்க்கு அறிவித்தான். அவர் அது தம்மால் யலாதென்று மறுக்கப், பின்னும் அவன் அம் முனிவரின் நூறு புதல்வரிடமுஞ் சென்று தன் கருத்தை அறிவிக்க, அவரும் இஃதியலாதென்று மறுத்துவிட்டனர். அதன்மேல் அவன் வகுண்டு அவர்களைக் கோழைகள் என்று வைய, அவர்கள் அவனைச் ‘சண்டாளன் ஆகுக' என்று சபித்தனர். பின்னர்இந் நிலையில் திரிந்து கொண்டிருந்தவன், விசுவாமித்திரரைத் தலைப்பட்டு அவர்க்கு நடந்த வரலாற்றைத் தெரிவித்துக் காள்ள, அம்முனிவர் தாம் அவற்காக வேள்வியாற்றி அவனைத் துறக்கத்தின் கண் உய்த்தற்கு உளம் இசைந்தனர். இசைந்து அவற்காக வேள்வி வேட்டுத் தேவர்களை வருமாறு அழைப்ப, அவர் வரா தொழிந்தனர். அதனால் அம் முனிவர் பெருஞ்சினங் கொண்டு, தமது வன்மையினாலேயே அவ் வரசனை மேலுயர்த்தித் துறக்கத் தின்கண் உய்ப்ப, ஆண்டுள்ள இந்திரன் அவனை ஏற்றுக் கொள்ளாது தலைகீழாகக் கீழே தள்ளிவிட்டனன். அவ்வாறு அவன் தள்ளுண்டு கீழ்நோக்கி வருதலைக் கண்ட விசுவாமித்திரர் அவனைக் கீழ்விழாமல் தடுத்து, அவன் வானிலேயே தலைகீழாகத் தொங்கிக்கொண்டு நிற்குமாறு செய்தனர். அவன்றான் அவன்றான் இப்போது தென் துருவத்தில் ஒரு வான்மீன் மண்டிலமாய்க் காணப் படுகின்றனனென ‘வான்மீகி இராமாயணம்' (1.57-90) நுவலா நிற்கின்றது.