-
சாகுந்தல நாடகம்
173
-
அம்புகளை, உறப்பொருந்தும் நீ - நிரம்ப வைத்திருக்கும் நீ, அளிஇலை அருள் இலாய் என்றும், கொடியை என்று கொடுங்குணம் உடை யை யென்றும், ஆயது எம்மையொத்தார் சொல்லும்படி ஆனது, என்கொலோ ஏதுகாரணமோ என்றபடி.
காமதேவன் கையிற் பிடித்த மலர்க்கணைகள் : தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலம் என ஐந்து, மிகமெல்லிய மலர்களையுடைய ஒருவற்கு மென்றன்மையாகிய அருள் இல்லாமையொடு, கொடுந்தன்மை யுண்டாயது மிகவும் வியப்பினைத் தருகின்ற தென்றான் அரசன்.
-
(பாட்டு) விரிகடலடியிற்.
-
பொருந்தியதே?
இதன் பொருள் : விரிகடல் அடியில் புதைந்த வெம்தழல் போல் அகன்ற கடலின் அடியிலே ஆழ்ந்து கிடக்கின்ற கொடிய தீயைப்போல், வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழும் தீ - சினங்கொண்ட சிவபிரானது நெற்றியிலுள்ள அழற்கண் கக்கிய மிக்க நெருப்பு, நினது அகத்து எரிகின்றதால் நின்னை எரித்து விடாமல் நின்னுள்ளே எரிந்து கொண் டிருக்கின்றது போலும், பொரிபட வெந்து சாம்பர் ஆயினை எனில் - அவ்வாறின்றிப் பொரியாகத் தீய்த்து சாம்பலாய் விட்டனையாயின், பொறாத இடர் புரிவாய் - தாங்கல் முடியாத துன்பத்தைச் செய்பவனே, எமை வெதுப்பல் - எம்மை நினது கொடுந் தீயிலிட்டு வாட்டல், எவ்வாறு உனக்குப் பொருந்தியது எங்ஙனம் உனக்குக் கூடியது, ஏ : அசைநிலை.
-
-
கடலின்கீழ்க் கிடக்கும் வடவாமுகாக்கினியை யொப்பச், சிவபிரான் சினந்து தமது நெற்றிக் கண்ணினின்றும் வெளிப்படுத்திய கொடுந் தீயும் நின்னை எரிக்கமாட்டாமல் நின்னிடத்தே குடிகொண்டு எம்போன்றாரை வெதுப்பித் துன்புறுத்துதற்கு முனைந்ததுபோலும் : எனத் தன் காம நோய் தாங்கமாட்டாமையால் அதனை விளைக்குங் காமன், றைவன் ஏவிய கொடுந்தழலில் வெந்திலன் போலும் என ஐயுற்று அரசன் கூறினானென்க.