176
மறைமலையம் 6
விழிகளாகிய மீனைச் சுமந்த பூங்கொடி போல்வாராகிய மகளிரையே தனக்குக் கொடியாக உடைய னென்றாதல் பொருளுரைத்தலும் ஆம். (5)
காமநோய் மிகப்பெற்றார்க்குக் குளிர்ந்த பொருள்கள் வெய்யவாகவும் மென்பொருள்கள் வன்பொருள்களாகவுந் திரிந்து காணப்படுதல் இயல்பாதலாற், சகுந்தலைமேற் காண்ட காதல் வெப்பத்தால் வருந்துந் துஷியந்தனும் இவ்வாறெல்லாங் காமவேளையுந் திங்களையும் பழித்துப் பேசினான் என்க.
(பக். 45) விடை அளித்தல் -உத்தரவு கொடுத்தல். நாடி தேடி.கதிரவன் - பகலவன் : சூரியன். நண்பகல் நடுப்பகல், ‘நள்’ நண் எனத் திரிந்தது. பச்சிளங்கொடி இளையகொடி. 'மாலினி' கருஅ. ஆம் பக்கத்து உரைக் குறிப்பைப் பார்க்க.
-
பசுமையான
(பாட்டு) முகை அவிழ்க்கும்...வளமுடைத்தே.
இதன் பொருள்: முகை அவிழ்க்கும் தாமரையின் அரும்பாயிருந்த பதத்தினின்று அலருந் தாமரை மலரின்கண் உள்ள, முதிர் மணத்தின் அளைந்து - மிக்க மணத்திலே தோய்ந்து, மிகை படுநீர் மாலினியின் - மிகுதியாய் ஓடும் நீரினையுடைய மாலினியாற்றின், விரிதிரை நுண்துளி வீசும் - அகலமான அலைகளினால் எறியப்படுஞ் சிறிய நீர்த் துளிகளை வாரிக் கொணர்ந்து வீசாநின்ற, தகை இனிய இளம் தென்றல் மென்மைத் தன்மையால் இனிதாகிய முதிராத தென்றற் காற்றானது, தனிக்காம எரி வெதுப்பும் - ஒப்பற்ற காமமாகிய தீயினால் வாட்டப்படும், தொகை உடம்பில் - எழுவகை முதற்கொருள்களின் தொகுதியாகிய உடம்பினால், தழுவுதற்கு அணைத்தற்கு, தொலையாத வளம் உடைத்து - கெடாத செழுமையினை யுடையதாகும் என்றவாறு. எ: அசை.
-
-
முழுதும் அலர்ந்துவிட்ட மலரின் மணங் குறையு மாதலால், அலர்ந்து கொண்டுவருந் தாமரயின் முதிர் மணம் என்றான்.