சாகுந்தல நாடகம்
போய்விட்டன, வண்ணமும் வெளிறின
-
179
உடம்பின் பல
பகுதிகளிலுள்ள நிறங்களும் வெளுத்துவிட்டன, தோளும் வாடின - இரண்டு தோள்களுஞ் சோர்வுற்றன என்றவாறு.
(பாட்டு) உருக்கிளர்..
உருக்கிளர்......கெழுந்தவே.
-
ல
இதன் பொருள் : உருக்கிளர் இளம் தளிர் உலரத் தீய்த் திடும் - நிறம் விளங்கும் இளந்துளிர்களை ஈரம் இல்லையாகத் - தீய்த்துவிடும், பொருக்கெனும் தீவளி பொருந்த வாடிய விரைய வந்து வீசுந் தீக்காற்று மேலேபடுதலால் வாடிப் போன, மருக்கமழ் மல்லிகை போன்ற - மணங்கமழும் மல்லிகைப் பூவையொத்த, மாதர்பால் மங்கையாகிய சகுந்தலை யினிடத்து, இரக்கமும் இன்பமும் ஒருங்கு எழுந்த - அவளது அழகிய மேனியின் வாட்டத்தைக் காண்டலால் அவள்பால் இரக்கமும் அவ் வாட்டம் என்பால் வைத்த காதன் மிகுதியால் உண்டாயிருக்கலாமென்று எண்ணுதலால் இன்பமும் ஒரே காலத்தில் என்னுள்ளத்தில் உண்டாயின என்றவாறு. ஏ: அசை. துயரம் விசனம். உசாவல் - யோசனை கேட்டல். விழைவு ஆசைப்பெருக்கம்.
பருகி
-
(பக். 49) அடவி - நாடு : கானகம்.
(பாட்டு) வேனில்கழிந்த........
-
பயந்ததுவால்.
—
இதன் பொருள் : வேனில் கழிந்த உடனே - கோடை காலங் கடந்தவுடனே, விரி கடல் நீர் - அகன்ற கடலினது நீரை, வானம் மேகமானது குடித்து, வரு கார்நாள் வருகின்ற கார்காலத்தில், மழையை நோக்கும், மன் உயி உயிருக்கு நிலைபெற்ற உயிர்களுக்கு, ஆனாமகிழ்வு அடங்காத மகிழ்ச்சியினை, தரல்போல் - தருவதுபோல, அடும் காதல் வருத்துகின்ற காமப் பேரன்பானது, ஏனை எனக்கும் இதுகாறுங் காதலின்னதென்றே யறியாமையின் அதற்கு வேறான எனக்கும், இன்பம் பயந்தது ன்பத்தை உண்டாக்கியது; ஆல்: அசை.
எள்ளுர்தண்ணீரும்
செய்யும் கடன்.
இறைத்தல்' இறந்தோர்க்குச்