சாகுந்தல நாடகம்
187
இதன் பொருள் : கயம் - ஓர் ஆழ்ந்த குளத்தினின்றும், கதுவப்படாமல் - எவராலும் பற்றப்படாமல், இளைது ஆக - இளையதாக, கெழுமி முறைத்து - பொருந்தித் தோன்றி, புதிதே விரிந்த மலரில் துளும்பிப் பொழிநறவை - புதிதாக மலர்ந்த பூவின்கண் நிறைந்து தளும்பிச் சொரிகின்ற தேனை, காதிகாதல் வண்டு உணல்போல - பருகுதற்குக் கொதிக்கின்ற அவாவினையுடையதொரு வண்டு குடித்தல்போல, சுவையாக் குழையும் இதழ் சுவைத்து அஃதாவது சுவைமிகுந்து நெகிழ்ந்திருக்கும் நினது இதழினை, மெதுவே சுவைத்து -யான் மெல்லச் சுவைத்து, அமிழ்து உண்டு - அதன்கண் ஊறாநின்ற புனல் அமிழ்தத்தை உட்கொண்டு, அணங்கே - தேவமாது போன்றாய், பின் அதன்பிறகு, விடுக்குவென் நின்னைப் போகவிடுவேன்; எ: அசைநிலை.
-
.
ப
-
ப்
சகுந்தலை இதற்குமுன் ஆடவர் எவரானுந் தீண்ட படாத தூயள் என்பது தெரிப்பான். எவரானுந் தொடப் படாமற் புதிதாகத் தோன்றியதொரு மலரினை அவட்கு உவமையாக எடுத்துரைத்தான். அம் மலரின் கட்டுளும்பி வழியாநின்ற தேன் அவள்பாற் பெருகாநின்ற காமவின்பத் திற்கு உவமையாயிற்று. அக் காமவின்பத்தின் வயத்தளாய் நின்றமையின் அவளது கொல்லையிதழ் கனிவுமிகுந்து சுவைமிகுதியு முடையதாயிற் றென்றான். ‘சுவைாய என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சுவைத்து எனப் பொருள் தந்தது.
(பக். 57) ‘சக்கிரவாகம்' என்பது ஆணும் பெண்ணுமாய் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமற் பறக்கும் ஒருவகைப் பறவை; இவற்றின் ஆண்பெண் இரவில்மட்டுந் தனித்தனியே பிரிந் திருக்குமென்றும், பகலில் இணைபிரியாதிருக்கு மென்றுங் கூறுவர். ஏதோ குற்றஞ் செய்தமைபற்றி ஒரு முனிவரிட்ட சாபத்தால், இவை இரவில் ஒன்றை விட்டொன்று பிரிந்து, ஓர் யாற்றங்கரையின் ஒருபுறத்தில் ஒன்றும் மற்றதன் எதிர்ப்புறத்தில் மற்றொன்றுமாக இருந்து வருந்திக்கூவு மென்று புராணகதை கூறும்; மேக தூதத்திலும் (2, 23) இது நுவலப்படுதல் காண்க. அச் சக்கிரவாகப் புட்போற் காதலிற் பிரியாத சகுந்தலையுந்