பக்கம்:மறைமலையம் 6.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் -6

(பக். 59) செக்கர் வானம் - சிவந்த வானம், மாலைக் காலத்திற் காணப்படுவது. அரக்கர்கள் சிவந்தநிற முடைய ராகச் சொல்லப் படுகின்றார்கள்.

நான்காம் வகுப்பு

சன்ற

(பக். 60) மேல்வகுப்பிற் காட்டியபடி துஷியந்த மன்னன் யாழோர் மன்றல் (கந்தருவமண) முறையாற் சகுந்தலையை மணந்த பின் தன்நகரத்திற்குச் சென்றுவிட்டான்.சகுந்தலையின் தோழிமார் இருவரில் அனசூயை என்பவள், நகர்சென்ற அரசன் தன் உவளகத்தில் உள்ள மகளிரொடு களியாட்டயர் தலாற், சகுந்தலையை மறந்து விடுவனோவெனக் கவலையுறப், பிரியம்வதை அவளை ஆற்றுவிக்கின்றாள். அதன்பின் தந்தையின் உடம்பாடின்றி நடந்த இம்மணத்தைப் பற்றித், தந்தையாரது மனநிலை எப்படியாமோ வெனப் பேசிக் கொண்டே இருவரும் பூப்பறிக்கின்றனர். இலைக்குடிலில் தனியேயிருந்த சகுந்தலைதன் காதலன்பாற் மனத்தினளாய்ப், புறத்தே நடப்ப தின்னதென் றறியாதிருந்த நிலையில், திடீரெனத் துருவாசமுனிவர் அக் குடிலுக்கு வர, அவரது வருகையையும் அறியாதிருந்த சாகுந்தலைமேல் அவர் வெகுண்டு “நின் காதலன் நின்னை நினையாதொழிக!” என்று தீமொழி கூறி வைது, அவ்விடத்தை விட்டுச் செல்கின்றார். இதனைத் தெரிந்து வெருக்கொண்ட தோழிமாரில் அனசூயை அம்முனிவர்பாற் சென்று, அத் தீமொழியை அகற்றும்படி வணங்கி வேண்ட, அவர் “ஓர் அணிகலத்தைக் காண்டலும் அவ் வசவு நீங்கும்” என்று விடுதி மொழிந்து போய்விட்டார். வெளியிடஞ் சென்றிருந்த காசியபர் தமது இத் தவப்பள்ளிக்குத் திரும்பிவந்து சகுந்தலை துஷியந்தனால் மணஞ்செய்யப் பெற்றுக் கருக்கொண்டிருக்கும் வரலாறு க களெல்லாந் தெரிந்து, அதனை ஏற்றுக்கொண்டு அவளை வாழ்த்திக், கணவன்பால் அவளை அனுப்புதற்கு வேண்டும் ஏற்பாடுகள் எல்லாஞ் செய்கின்றனர். அவளை வழிகூட்டி விடுக்கையில், தோழிமார் அரசன் றந்த கணையாழியை அவள் கையிற் றந்து “அரசன் நினைவு கூர்தற்கு அடையாளமாக இதனைக் காட்டு" என்று சொல்லி விடுக்கின்றனர். காசியபர் மாணவர் இருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/221&oldid=1577704" இலிருந்து மீள்விக்கப்பட்டது