பக்கம்:மறைமலையம் 6.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் 6

வைத வசவு சகுந்தலை யறியாளாய் இருந்தால் மட்டுமே இனி நடக்கும் நாடக நிகழ்ச்சி சுவைப்படுமாதலால், அதனை அவள் அறியாவாறு தோழிகள் மறைத்து வைத்தனரென அவர் படைத்து மொழிந்த திறனும் வியக்கற்பாலதாகும்.

(பாட்டு) இலைகிளர்.......

படுமே.

-

(பக். 64) இதன் பொருள் : இலைகிளர் பூண்டுக்குத் தலைவன் ஆகிய சுடர் ஒளிமதியம் இலைகள் விளங்கும் மருத்துச் செடிகளுக்குத் தலைவனாகிய மிகுந்த ஒளியினைத் தரும் முழுநிலா வானவன், குடபால் வரையின் ஒருபுறம் செல்லாநிற்ப மேற்கின்கண் உள்ளதாகிய அத் தகிரியிலே ஒருபக்கஞ் சென்று சேராநிற்க, ஒருபுறம் - மற்றொரு பக்கத்தே, வைகறை என்னும் கைவல் பாகனை, விடியற் காலம் என்று சால்லப்படுங் கைதேர்ந்த தேர்ப்பாகனை முன்செல விடுத்து - முன்னே போகவிட்டு, பொன் போல் ஞாயிறு கீழ் பால் எல்லையில் கிளரும் பொற்றிரளையை யொத்த பகலவன் கிழக்குத் திசையின் மருங்கே விளங்கா நிற்கின்றது, ஒருகால் ஈர் இடத்து ஈர்ஒளிப்பிண்டம் ம் தோன்றலும் மறைதலும் ஆன்று அறியுங்கால் ஒரே காலத்தில் இரண்டிடங்களில்

-

-

-

ருவகை ஒளிப்பிழம்புகளில் ஒன்று தோன்றுதலையும் மற்றொன்று மறைதலையும் அமைதியாக ஆராய்ந்தறியுமிடத்து, மண்ணோர் வாழ்க்கையில் இன்னலும் இன்பமும் மாறிமாறி வீறுதல் பெறும் - இம் மண்ணுலகத்தவர் வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறிமாறி மிக்குத் தோன்றுதல் விளங்கப்பெறும், செழுமதி என்னும் கொழுநனை இழந்து அழகிய திங்கள் என்னுங் கணவனை இழந்து, முதிர்எழில் போன ஆம்பல் – அதனாற்றனது சிறந்த அழகுகெட்ட அல்லிப் பூவின் தோற்றமானது, எதிர் விழிக்கு அதனை நேர்நின்று நோக்குங் கண்களுக்கு, இன்பம் பயவா - ன்பம் பயவா - இன்பந்தராத, இயல்பு உணர்விடத்து தன்மையினை உணர்ந்து பார்க்குமிடத்து, ஈங்கு இவ்வுலகத்திலே, ஆர்உயிர்க் காதலர்ப் பிரிந்த - தம் அரிய உயிர் போற் கணவரைப் பிரிந்த, வார் இருங் கூந்தல் மடவார் நீண்ட கரிய கூந்தலையுடைய மங்கையர், எய்தும் தாம் அடையுஞ் சாக்காடு அன்னதுன்பம்,

-

சாம்துயர்

-

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/223&oldid=1577706" இலிருந்து மீள்விக்கப்பட்டது