சாகுந்தல நாடகம்
193
பொறுத்தற்கு அரிது எனப்படும் - தாங்குதற்காகாதது என்று சொல்லப்படும்; ‘அன்று ஏ' அசைநிலைகள்.
சழுமையாக
மருத்துப் பூடுகள் நிலவொளியிற் வளருமென்பது புராணக்கூற்று: அதுபற்றியே மதியோன் மருத்துப் பூடுகளுக்குத் தலைவன் எனப்பட்டான்; நோய் சாக்காடுகளை நீக்கு வனவான மருந்துகளை வளர்ப்பவனே இறந்து படுகின்றனனென்றால், ஏனை மக்களின் நிலை என்னாம் என்பது இங்கே குறிப்பால் உணர்த்தப்பட்ட நுட்பம் அறிக. பகலவன் எழுச்சிக்கு முந்துவது பற்றி விடியற் காலம் பகலவன் தேர்ப்பாகனாகச் சொல்லப்பட்டது; இவ் வைகறைப் பொழுதை ‘அருணன்’ என்னுந் தேர்ப்பாகனாக உருவகப் படுத்துச் சொல்வது வடநூல் வழக்கு. முழுநிலா நாளின் வைகறைப் பொழுதைக் காண்பார்க்கு, ஒரே நேரத்தில் மேற்கே முழுமதி மறைதலுங் கிழக்கே பகலவன் தோன்றுதலும் ஆகிய காட்சியின் வியத்தகுநிலை நன்கு விளங்கும்; இக் காட்சியின் பெற்றியினை ஆழ்ந்துணர்வார்க்கு, இந் நிலவுலகின் கண் வாழ்க்கையிற் சிறந்து விளங்கினான் ஒருவன் தனது விளக்கங் குன்றி மாயும் நிலையினை எய்துதலும், மிடிப்பட்டு மிகத் துன்புற்ற ஏனையொருவன் அத் துன்பம் நீங்கி வளவிய வாழ்க்கையில் வயங்கு நிலையினை எய்துதலும் நன்கு புலனாம். ச் செய்யுளின் இவ் வரிய கருத்துக் காளிதாசருக்கு முற்பட்ட காலத்ததாகும்,
வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப
ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேர லாதனை
யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும்
பகல் விளங்கலையாற் பல்கதிர் விரித்தே.