பக்கம்:மறைமலையம் 6.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 6

என்னும் புறநானூற்றுச் செய்யுட் கருத்தோடு ஒருபுடை யொத் திருத்தல் காண்க; இப் புறநானூற்றுச் செய்யுளின் ஈற்றிற்" பகல் விளங்குதி யால்" எனவும் பாடங்கொண்டு அதனை ஞாயிற்றின் மேலும் ஏற்றுக.

மாணாக்கனது உரையாய் எழுந்த இ இச் செய்யுளில், ஆக்கியோன், காதலரைப் பிரிந்த மடவார் எய்துந் துன்பத்தின் மிகுதியினைப் பொது நோக்காகக் கூறுவதுபோற் காட்டித், தன் காதலன் துஷியந்தனைப் பிரிந்து சகுந்தலை படும் பெருந்துயரினை உயத்துணர வைத்தமை காண்க. நிலவின் வருகையால் இராக்காலத்தே மலருந் தன்மையது அல்லி மலராகலின், மதியோனை அதற்குக் கணவனாகக் கூறுவது ன செய்யுள் வழக்கு; விடியற் காலத்தே கூம்பி அழகின்றி வாடிய அல்லிமலர் காதலனைப் பிரிந்து வாடியிருக்குஞ் சகுந்தலையின் தோற்றத்திற்கு உவமையாயிற்று. “வீறுதல் பெறும்” என்பதற்கு அவாய் நிலையால் ‘விளங்க’ என்னும் ஒரு சொல் வருவித் துரைக்கப்பட்டது.

(பக். 65) இரண்டகம்

கயவன்

-

நம்பினவர்க்குச் செய்யுந் தீது. கீழ்மகன். காமவேள் - மன்மதன். சீற்றம் பெருஞ் - சினம். புகன்ற சொல்லிய. திருமுகம் - கடிதம். ஒருப்படுதல் - உடன்படுதல். சுருக்க விரைய.

-

காசியபரது மனம் எந்நேரமும் வேள்வி வேட்டலிலேயே பதிந்திருத்தலிற், சகுந்தலையின் உள்ளந் துஷியந்த மன்னனைச் சார்ந்தமைக்கு, வேள்வி வேட்பவன் கண்களாற் பாராமலே இட்ட பலியானது தவறாமல் வேள்வித் தீயில் விழுந்ததனை உவமையாக எடுத்துக் கூறினார்; வேள்வி வேட்பவன் சகுந்தலைக்கும், அவன்றன் கண்களை மறைத்த புகை சகுந்தலையின் அறிவை மறைத்த காதலுக்கும், பாராமல் பலி தவறாமல் வேள்வித் தீயில் விழுந்தமை சகுந்தலை காதல் வயத்தளாய்ச் செலுத்திய உள்ளந் துஷியந்தன் பாற் பட்டமைக்கும் உவமைகளாதல் காண்க.

L

கு

(பக். 66) தகுதிவாய்ந்த மாணாக்கனுக்கு ஆசிரியன் புகட்டிய கல்வியானது அவற்கும் பிறர்க்கும் பெரும்பயன் தந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/225&oldid=1577708" இலிருந்து மீள்விக்கப்பட்டது