ப
196
-
மறைமலையம் -6
பாடங்காணப்படுகின்றது; இது மானிலிருந்து எடுக்கப்படும் மருந்து; அதனால் இதனைத் தமிழ் நூலார் ‘மான்மதம்’ என்பர். தீர்த்த மண் தூய நீர்நிலையின் ஓரங்களிலிருந்து எடுக்கப்படும் மண் ‘அருகம்புல்' ஓசையுருவில் விளங்கும் இறைவற்கு ஏற்றது. இம்மூன்றும் மங்கலச் சடங்கிற் குரியார் அணிந்துகொள்வனவாகும். மணக்கூட்டு
பண்டங்களின் கலவை.
மணப்
‘அத்தினபுரம்' என்பது இப்போதுள்ள டில்லி நகருக்கு வடகிழக்கே 54-கல்லில் உள்ளது; பரதவேந்தன் வழிவந் தோனான ‘அத்தினன்' என்பவனால் உண்டாக்கப்பட்டது; கங்கையாற்றில் வந்து கலக்கும் ஒரு கிளையாற்றங்கரை மருங்கே உள்ளது. துஷியந்த வேந்தன் மகனான பரதன் காலத்திற்குப் பின்னர் உண்டாகிய இந் நகரைத், துஷியந்தன் காலத்தில் அவற்குரிய தலைநகராகக் காளிதாசர் கூறியது காலமுரண் ஆகும்.
(பக். 68) மஞ்சளரிசியை வடநூலார் ‘அக்கதை’ என்பர். மணை இருக்கை.
-
(பக். 69) ஒப்பனை
-
அலங்காரம். மணிக்கலன்கள் இரத்தினாபரணங்கள். வரிசை - பரிசு. அணிகலன்கள் நகைகள்.
சான்றது - கக்கியது. பஞ்சி
-
பஞ்சு. அணங்கு
தெய்வப்பெண்.
-
(பக். 70) அருட்பேறு அருளால் வந்த செல்வம். நுகர - அனுபவிக்க.
(பாட்டு) இன்று.
னிலேதானே.
-
இதன் பொருள் : இன்று சகுந்தலை போகின்றாள் என்று எண்ணுதொறும் - இன்றைக்குச் சகுந்தலை என்னைப் பிரிந்து போகின்றாளே என்று நினைக்குந்தோறும், என் காழ்மனன் ஒன்றுங் கவலையினால் கன்றுவது எனது வயிரம் ஏறிய உள்ளமும் பொருந்திய கவலையினால் நைகின்றது, துன்றிய கண்நீர் சோராது அம்ம - என் கண்களில் வந்து நிறைந்த கண்ணீரானது வடியாது யான் அடைக்கவே, தொடர்பு உற்று
ம