சாகுந்தல நாடகம்
நின்று என் மிடறு ஓ கம்முவது
-
197
அதனொடு தொடர்பு
காண்டு நின்று எனது தொண்டையோ கம்மிக்
கொள்கின்றது, என் நிலைதான் என் யிருந்தவாறு என்னே! என்றவாறு.
-
எனது நிலைமை து
‘மனன்' என்பதன் ஈற்றில் உயர்வு சிறப்பு உம்மை விரிக்க அம்முதல் அடைத்தல்.
-
(பக். 71) ‘யயாதி' என்னும் அரசன் திங்கள்மரபில் வந்தோன். 'சர்மிஷ்டை' என்பான் பிசாசர் மன்னனாகிய விருஷபர்வன் மகளாவன். சுக்கிராசாரியார் மகளான தேவயாநியை யயாதிவேந்தன் முதலில் மணந்துகொண்ட போது, அம் மணமகளுக்குத் தோழியாகச் சர்மிஷ்டை வந்தனள். இவள் அழகிலும் அறிவாற்றலிலும் நிகரற்றவளாய் ருந்தமையின், யயாதி இவள்மேற் பெருங்காதல் கொண்டான்; அங்ஙனமே சர்மிஷ்டையும் அவன்மேற் பெருங்காதல் கொண்டாள்; பின்னர் இருவருந் தம் பெற்றோர் உடன்பாடு பெறாமல் தாமாகவே மணஞ்செய்து கொண்டனர்.
சகுந்தலையுந் துஷியந்தனுந் தம்பெற்றோரின் உடன்பாடு பெறாமலே தம்முன் எழுந்த பெருங்காதலால் தாமாகவே மணஞ்செய்து கொண்டவராகலின், அவரது காதற் கிழமைக்கு ஏற்ப அவர்போற் காதன்மணம் புரிந்த யயாதி சர்மிஷ்டை ன்பவாழ்க்கையை எடுத்துச் சொல்லிக் காசியபமுனிவர் வாழ்த்துரை கூறிய நுட்பம் வியக்கற்பாலது.
அடிகேள்' என்பது அடிகள் என்னுஞ் சொல்லின் வழி தவவொழுக்க முடையாரை ‘அடிகள்’ என்றழைப்பது தமிழ் வழக்கு; ‘சுவாமிகள்' என்றழைப்பது வடமொழி வழக்கு.
ருக்குவேதத்திலுள்ள பாவுக்குச் ‘சந்தசு’ என்பது பெயர்; அது நான்கடியாய், ஒவ்வோரடியும் பதினோரசைகள் உடையவாய்த் தொடுக்கப்படுவது.
(பக். 72) கானக அணங்கு - காட்டில் உறையுந் தெய்வம். உறைவிடம் - வாழும்இடம். அருந்தல் உட்கொள்ளல் விழா- திருநாள்.