சாகுந்தல நாடகம்
201
(பக்.80) சிவம் - நலம், இன்பம். உலகத்திற்கும் உயிர் களுக்குந் தலைவனாய் விளங்கா நின்ற முழுமுதற் கடவுள் நன்மையே இன்பமே உருவாய்க்கொண்டு விளங்கலின், அவன் இவ் விந்தியநாட்டின்கண் இருந்த பண்டைச் சான்றோராற் ‘சிவன்' என்னுஞ் சிறப்புப் பெயரால் அழைத்து வழுத்தப்படு வானாயினன்; காமம் வெகுளி மயக்கம் என்னும் முக் குற்றங்களின் வயமாகிப் பிறவிப் பெருந் துன்பத்திற் கிடந் துழலும் மக்கள் அத்துன்பத்தின் நீங்கி, மாறாப் பேரின்பத்தையே பெற விழைகுவராதலாலும், அப் பேரின்பமானது வெறெங்கும் பெறப்படாதாய் இறைவனிடத் திருந்தே பெறக்கடவதா யிருத்தாலாலும், அவ்விறைவனும் இன்ப வடிவினனாயே விளங்குகின்றனனென்று அவனியல்பை நன்குணர்ந்த ஆன்றோர்களும் அவர் அருளிச்செய்த மெய்ந்நூல்களும் நுவலுதலாலும், இன்பத்தைப் பெறுதலிலேயே அவியாப் பெருவேட்கை யுடைய மக்கள் அவ் வின்பப் பெயரால் அவ் விறைவனை அழைப்பின் அவரது நினைவு இன்பத்தின் கண்ணதாயே நிற்குமாதலாலும், இறைவனைக் 'கடவுள்’ என்று பொதுப்பெயரான் அழையாமற் ‘சிவன்' என்று சிறப்புப் பெயரான் அழைத்தலே பண்டைச் சான்றோர்க் கெல்லாம் ஒத்த முடிபாய் இருந்தது; அவ் வழி பிழையாது வந்த காசியபரும் இறைவனருளால் வரும் இன்பஞ் சகுந்தலைக்குப் பெருகல் வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியே, வேறு பெயரால் வாழ்த்தாமற் "சிவாஸ்தே" அல்லது 'சிவம் பருகட்டும்' என்னுஞ் சிறப்புப் பெயரால் வாழ்த்தினர்.
மரச்செறிவு - மரநெருக்கம். வெறிதாய் - வெறுமையாய்.
ஐந்தாம் வகுப்பு
(பக். 81) இப்போது துஷியந்த மன்னன் தன் அரண் மனையின் உவளகத்தில் ‘அமிசபதிகை' என்னும் நங்கையார் பாடிய ஓர் இசைப்பாட்டைக் கேட்டு, அதன் கருத்துத் ‘தன்னாற் காதலிக்கப்பட்டார் ஒருவரை ஒரு நொடிப்பொழு தேனும் மறந்துறையலாமோ” என்பதாக இருத்தலை ஆராய்ந்து மனக்கலக்க முற்றவனாய் இருக்கின்றான். இதனால் துருவாசர்