பக்கம்:மறைமலையம் 6.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் 6

ட சாபமானது அரசனது நினைவை மறைத்துவிட்ட தெனப், பின் நிகழும் நிகழ்ச்சிக்கு முன் ஒரு காரணம் நாடக ஆசிரியர் குறிப்பிக்கின்றார். அரசன் இவ்வாறிருக்கையிற் காசிபர் மாணவருங் கெளதமி அம்மையாருஞ் சகுந்தலையை உடன்கொண்டு அரசன் முன்னிலையில் வந்து சேர்கின்றனர். அரசன் அவர்களைப் பணிவுடன் வரவேற்றுச் சகுந்தலையை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் கூறியது கேட்டு வியப்படை தான் கானகத்தில் மணந்த

கின்றான். சகுந்தலையைத்

நிகழ்ச்சியை அரசன் முற்றும் மறந்து, அவளைப் பிறன் ஒருவன் மனையாளாகவே நினைந்து அவளை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கின்றான். உடனே சகுந்தலை அரசன் கூறிய சொற்களைக் கேட்டு மனம் பொறாளாய், அவன் தன்னை மணந்துகொண்ட ஞான்று தன் கை விரலில் இ L கணையாழியைக் காட்டுதற்கு அதனைத் தடவிப் பார்க்க, அதனைக் காணாமையால் உளம் நடுங்கி, அவன் நினைவு கூர்தற்குத் தக்க வேறு சில முன் நிகழ்ச்சிகளை எடுத்து மொழிகின்றாள். அரசன் அவற்றாலும் நினைவுகூர மாட்டானாய்ச் சகுந்தலையை இகழ்ந்து பேச, அவள் கடுஞ்சினங் கொண்டு அவனை வைதுவிட்டு அழுகின்றாள். அவளுடன் வந்தவர் அவளை

வி

அரசன்

எதிரிலேயே விடுத்து விட்டுத் தாம் காசியபர் உறையுளுக்குத் திரும்பி விட்டனர். சகுந்தலையின் ஆற்றாப் பெருந்துயர் நிலையினை அரசன்றன் புரோகிதர் கண்டு உளம் நைந்து, மகப்பேறு வரையில் அவளைத் தமது இல்லத்தில் வைத்துப் பாதுகாக்க முன்வந்து தமது கருத்தை அரசனுக்குத் தெரிவிக்க, அரசனும் அதற்கு ஒருப்படுகின்றனன். அதன்பிற் புரோகிதர் சகுந்தலையைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், திடீரென வெறு வெளியில் ஒரு பெண் உருத் தோன்றிச் சகுந்தலையைக் கொண்டுபோய் விட்டது. இதனைப் புரோகிதர் அறிவிக்க அறிந்து அரசன் ஐயமும் மனக்கலக்கமும் மிக்கோனாய்த் தன் பள்ளியறையுட் சென்று, படுக்கையிற் கிடந்து வருந்திக் கொண்டிருக்கின்றான் என்னும் அளவும் இவ் வைந்தாம் வகுப்பினுள் நடைபெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/233&oldid=1577716" இலிருந்து மீள்விக்கப்பட்டது