சாகுந்தல நாடகம்
நடத்துஞ் சுழன்ற இயக்கமாதிய ‘குண்டலிசத்தி’யே ஆதிசேஷன்'
என்னும்
பாம்பாக
படுத்தப்பட்டதென்பது புலனாகாநிற்கும்.
-
205
ங்ஙனம்
உருவகப்
பாறை- சுமை. கட மை வரி. அஞ்ஞான்றை விளை பொருள் வருவாயில் ஆறில் ஒரு கூறு வரியாகப் பெறுவது அரசரது வழக்கம்; அஃது இஞ்ஞான்றை வரியினுஞ் சால மிகுந்ததேயாகும். அலுவல் - வேலை. நண்பகல் - நடுப்பகல்: நன் என்பது நண் எனத் திரிந்தது.
-
சுருதி செவியாற் கேட்குப்படுவது; பண்டைநாளில் வடநாட்டினர் தமது வடமொழியை எழுத்திலிட்டு எழுதும் வகை தெரியாதவராகவின், தம் முன்னோர் நூல்களைத் தம் ஆசிரியர் நெட்டுருச்செய்து வாயாற்சொல்ல, அவற்றைத் தாம் காதாற் கேட்டுத் தாமும் அவர்போல் நெட்டுருச் செய்தல் நீண்டகால வழக்கமாய்ப் போந்தது. அதனால் அவர் அறிவுநூல்கள் ‘சுருதி' என் றழைக்கப்படன.
வரிசைகள் - ஒழுங்குகள், சிறப்புகள்.
-
(பக். 84) வேத்திரவதி - பிரப்பங்கோலந் தாங்கியவன், காவலராயிருப்பவர் பிரப்பங்கோரைத் தாங்குதல் மரபு துஷியந்தன் அரண்மனையில் ஆண்பாலாரே யன்றிப் பெண் பாலாருங் காவலராய் இருந்தனரென்பது இதனால் அறியப் படுகின்றது; வேத்திரம் (வடசொல்) பிரம்பு; 'பிரதீகாரி’ என்பதும் இவட்குப் பெயர். விழைந்தது- விரும்பியது. பழையகாலத்திருந்த குடைகள் நீண்ட காம்புகளை யுடையன வாகையால், அவவை தம்மைப் பிடிப்பவனுக்கு வருத்தத் தினைத் தரும்; அதுபற்றியே அரசன் தனது அரசியலின் வருத்தத்தைக் குறித்தற்கு அத்தகைய குடையை காட்டினான்.
உவமை
'வைதாளிகன்' என்போன் ஒருநாளின் பல கூறுகளையும் அவற்றில் அரசர் செய்தற்குரிய கடமைகளையும் அறிவித்து அரசனைப் புகழ்ந்து பாடுவோன்; அரசனைக் காலையிற் பாடித்துயில் எழுப்புதலும்இவற்குரிய கடமைகளில் ஒன்று.
அ