சாகுந்தல நாடகம்
207
பொருளால் உயர் திணையுமாம்; சில பெயர்ச் சொற்கள் இவ்வாறு வருதல் “குடிமையாண்மை” என்னுஞ் சூத்திரத்திற் காண்க (தொல்காப்பியம், சொல். 54.)
-
வேள்விக்குரிய ஆ (வடமொழி) யாகபசு. அலைக்கப் படுதல் - துள்புறுத்தப்படுதல். பலதிறம் - பலவகை. உவந்து - மகிழ்ந்து.
உ
(பக். 86) தனித்த கானக வாழ்க்கையி லிருந்தவர்களாத லால், மக்கள் நிறைந்த பட்டின வாழ்க்கையானது, தீ சூழ்ந்த இல்லம்போற் காசியபமுனிவரின் மாணவர்க்குத் தோன்ற லாயிற்று. எனை - மற்ற. இயங்குவோன் - நடப்போன். உவர்ப்பு அருவருப்பு.
மகளிர்க்கு வலக்கண் துடித்தால், அஃது அவர்க்குப் பின் வருந் தீங்கினை உணர்த்துங் குறியாம் என்பர். மாட்சிமை பெருந்தன்மை.
ய
-
-
(பக். 87) அந்தணர் - அருள் உடைய முனிவர், புனல் - நீர். முகில் - (வடசொல்) மேகம். தொழில்துறை தொழில் வகை. கட்புலனாகாத - கண்ணுக்குத் தெரியாத. குறி அடையாளம்.
(பக். 88) உன்னிப்பு - (வடசொல்) கவனம். கோரிய விரும்பிய: இச்சொல் 'கோறிய' என்று எழுதப்படுமானாற் கான்ற என்று பொருள்படும்.
6
-
-
பொருள் உடைமொழி ஒரு பொருளைக் குறிக்குஞ் சொல்; ஒரு பொருளைக் குறியாத சொற்கள் என்பன ‘மலடிமகன்,' 'முயற்கொம்பு,' ‘யாமைமயிர்,' போல்வனவாகும். ‘மந்திரம்’ என்பது தவத்தால் மிக்கவர் கூறும் ஆற்றலுடைய சொல்; ஆற்றல் -வல்லமை; "ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும், எண்ணிற் றவத்தான் வரும்” என்று ஆசிரியர் தெய்வத்திருவள்ளுவர் அருளிச் செய்தலின், பிறரை வாழ் வித்தலுந் தாழ்வித்தலும் முனிவரர் சொல்லிலே அமைந்து கிடப்பனவாகும்; ஆதலின் அவர்தாம் நலமுடையராயிருத்தல் சொல்லல் வேண்டாவென்பது.