பக்கம்:மறைமலையம் 6.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 6

(பக். 89) இந் நிலவுலகில் நடக்கும் மணங்கள் பெரும் பாலனவற்றிற் சிறந்த ஓர் ஆண்மகனுக்குச் சிறந்த ஒரு பெண் மகளுஞ், சிறந்த ஒரு பெண்மகளுக்குச் சிறந்த ஓர் ஆண்மகனும் அமையாமல், மாறுபட்ட சேர்க்கையே அமையக் காண்டலின், அது பற்றி மக்களைப் படைத்த நான்முகக்கடவுள் உலகத்தவ ராற் பழிக்கப்படுவானாயினன்; ஆனாலுந், துஷியந்தனும் அவனுக்கு எல்லாவாற்றானும் ஒத்த சகுந்தலையும் ஒருங்கு ர்க்கப்பட்டமையின் இப்போது அவனுக்கு அப் பழிப்பு நீங்கியதென்று காசியபர் சொல்லி விடுத்தனர். கரு -சூல்.

மேதகவு - மேம்பாடு. இதன்திறத்து - இதன் பக்கத்தில். (பக். 90) செருக்கு களிப்பு.

(பாட்டு) வடுவறு

-

கில்லேனே.

இப்

-

-

இதன் பொருள் : வடுஅறு - குற்றம்அற்ற, பேர்எழில் வயங்க- மிகுந்த அழகு விளங்க, இவ்வயின் வரும் - இவ்விடத்தே வந்திருக்கும், கொடிபுரை ர உருவினாள் தன்னைக்கூடி பூங்கொடி போல் துவளாநின்ற உருவத்தினையுடை ய இ பெண்ணைப் புணர்ந்து, நான் கடி மணம் அயர்ந்ததாக் கருதலாமையால் - யான் புதியதொரு மணத்தைச் செய்ததாக எண்ணக்கூட ாமையால், விடியலில் பனிஅகத்துள்ள மெல்மல்லிகை படிதராது உழிதரும் பைம் சிறைவண்டு என விடியற்காலத்தே பெய்யும் பனியினை உள்ளேயுடைய மெல்லிய மல்லிகை மலரின்கண்ணே சென்று அமர்தலைச் செய்யாது சுழன்று கொண்டிருக்கும் பசிய சிறையினை யுடைய ஒரு வண்டைப்போல, தொடுதலும் விடுதலும் துணிய ரு கில்லேன் இவளைத் தொடுதலையாவது விட்டு விடுதலை யாவது துணிந்து செய்யமாட்டேனாய் இருக்கின்றேன் என்றவாறு, எ : அசை.

மலர்ந்த மல்லிகை மலரின்கட் டேனைப் பருகுதற்கு நச்சிச் சென்ற ஒருவண்டானது, அதன் தேனை மறைத்துக் கொண்டு இருக்கும் பனியைப் பார்த்து, அம் மலரின் கட்சென்று படியாதாய் அதனைச் சூழ்ந்து சூழ்ந்து பறக்குமே யன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/239&oldid=1577722" இலிருந்து மீள்விக்கப்பட்டது