சாகுந்தல நாடகம்
209
அதனைவிட்டுச் செல்லாது; அதுபோல, அழகிற் சிறந் தாளாய்த் தோன்றுஞ் சகுந்தலையை
மனையாளாக
ஏற்றுக்கொள்ளலாம் என்று தான் விரும்பினாலும், அவள் கருக்கொண்டிருக்குங் குறிகள் காணப்படுதலால் அவளை ஏற்றுக்கொள்ளக் கூடாமலும், அழகிற் சிறந்தவளாயுங் கருக்கொண்டிருப்பவளாயும் உள்ள ஒரு மாதரை இந் நிலையில் அகற்றிவிடக் கூடாமலுந் தன் உள்ளம் வருந்துதலை அரசன் உணரலானான் என்க. சகுந்தலை கருக் கொண்டிரா விட்டால் அவளைக் கன்னிப்பெண்ணாக நினைந்தும், அவளுடன் வந்தார் சொல்லிய கதையினை நம்பியும் அவளைத் தன் மனையாளாக ஏற்கலாம்; மற்று அவளோ கருக்கொண் டிருத்தலால் அவள் பிறன்மனையாளாக இருக்கலாம்; அவ்வாறாயிற் பிறன் மனையாளை ஏற்பது தனக்கு ஆகாது என்றெண்ணிய துஷியந்தனது நேர்மை பாராட்டற்பால தொன்றாம் என்பது.
-
(பக். 91) குறி
-
உறுதியான எண்ணம். தாழ்ப்பர் (வடசொல்) தாமதிப்பர். வாளா-சும்மா. கருக்கொண்ட குறிகள் சூல்கொண்டதற்குரிய அடையாளங்கள்.
சகுந்தலை தமது உடம்பாடு பெறாமலே துஷியந்தனை மணந்து கொண்டும்,அதனைக் குற்றமாக நினையாது அதனை யொப்புக் கொண்ட பெருந்தன்மையுடையரான காசியப் முனிவரை, அரசன் சகுந்தலையை ஏற்றுக் கொள்ளாமையால் இழிவுபடுத்தினவனாயினன் என்று அவர் தம் மாணவர் வருந்திச் சொல்லித், தம் ஆசிரியரை இழிவுபடுத்திய அவ் வரசனைத் தாமும் இழிவுபடுத்தல் வேண்டி, அவனைத் திருடனாகக் கூறுகின்றார்.
காசியபர் இல்லாத காலத்தில் அவர்க்குரிய பொருளான சகுந்தலையைக் கவர்ந்தமையா அரசன் கள்வனாயினன்; அவன் கவர்ந்த பொருளை மீண்டும் அவற்கே ஒப்படைத் தலாற் காசியபர் கள்வற்கும் உதவி செய்தவராயினர்; ஆகவே, காசியபரின் உள்ள மேம்பாடும், அரசனின் உள்ளக் குறைவும் நன்கெடுத்துக் காட்டி அம் மாணவர் அவனை நன்கு இகழ்ந்தமை காண்க.