பக்கம்:மறைமலையம் 6.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

  • மறைமலையம் -6

(பக். 92) தீர்க்கப்படுதல்

-

-

முடிவு செய்யப்படுதல்.

உடம்படுமொழிகள் ஒருவரைத் தம் கருத்துக்கு இசைவிக்கச் சொல்லுஞ் சொற்கள். வடு - நீங்காக் குற்றம்.

சக்கராவதாரம் - இந்திரனுக்கு உரித்தான ஓர் இறங்கு துறை; ‘அவதாரம்' என்பது நீரில் இறங்குதல் எனப் பொருள் தருவது, இஃது அத்தினாபுரத்திற்கு அருகிலுள்ள ஓர் யாற்றின்கண் உள்ள உள்ள படித்துறைப் பெயராகக் காணப் படுகின்றது. 'சசிதீர்த்தம்' என்பது சக்கராவதாரத்துக்கு

அருகில் இந்திரன் மனையாளான சசிதேவிக்கு உரிய

படித்துறை.

சூழ்ச்சி (வடசொல்) உபாயம்.

-

(பக்.93) எடுப்புப்பிள்ளை - (வடமொழி) சுவீகார புத்திரன். விலங்கு-(வடசொல்) மிருகம்; நெடுக்காயிருக்கும் மக்கள் வடிவு போலாது, குறுக்காயிருக்கும் வடிவுபற்றி விலங்கெனப் பெயர் பெற்றன்; விலங்கு என்பதன் முதனிலைப் பாருள் 'குறுக்காயிருப்பது' என்பதேயாகும்.

குயிற்பெடைகள் தாம் இடும் முட்டைகளை அடை காக்கத் தெரியாவாகலால், அவை தம் முட்டைகளைக் காக்கையின் கூடுகளில் இடக், காக்கைப் பெடைகள் அவற்றையுந் தம் முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரித்துப், பொரித்த குயிற்குஞ்சுகளுக்குத் தங் குஞ்சுகளோடு ஒக்கச் சேர்த்து இரைகொடுத்து வளர்த்தாரையும், வளர்த்தபின் அக் குயிற்பிள்ளைகள் காக்கையை விட்டுப் பறந்தோடிப் போதலையுந் தோப்புகளில் இன்றும் பார்க்கலாம். அரசன் எடுத்துக் காட்டிய இவ் வுவமையின் வாயிலாக, மேனகைக்குப் பிள்ளையாகப் பிறந்துஞ் சகுந்தலை அவனால் வளர்க்கப் படாமற் காசியபரால் வளர்க்கப்பட்டு வளர்ந்த குறிப்பும் ஈண்டு நாடக ஆசிரியர் உய்த்துணர வைத்தல் காண்க.

-

(பக். 94) இணங்க இசைய. அறக்கடமை -அறம் ஆகிய கடமை. தான்கீழ் இருப்பது தெரியாவாறு மேலே புற்களால் மூடப்பட்டிருக்கும் ஒரு பாழ்ங்கிணறு, தான் இருக்கும் வழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/241&oldid=1577724" இலிருந்து மீள்விக்கப்பட்டது