வண்திங்கள்
சாகுந்தல நாடகம்
-
213
-
சிவந்த
-
மெய் வாய் கண் மூக்குச் செவி
வெண்மதி.செஞ்ஞாயிறு
கதிரவன். ஐம்பொறிகள்
என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக நிகழும் ஐந்து அவாக்கள். ஒருப்படாது உடன் படாது.
-
(பக். 97) பிள்ளைப்பேறு கருவுயிர்ப்பு.
அரசடை டயாளம் அரசனுக்குரிய அடை யாளம்; அஃதாவது ஒருவனது வலக்கையில் உள்ள வட்ட (சக்கர) வடிவான ஒருவரி; அது காணப்படுமாயின் அவன் அரசுபுரிவான் என்று உள்ளங்கை வரி நூல் (யீடஅளைவசல) சாற்றும்.
குரவர் - ஆசிரியர்; குரு. பூதேவி (வடசொல்) - நிலமகள்.
(பக். 98) ஓலம் - அழும் ஒலி. 'அப்ஸரஸ்தீர்த்தம்' என்பது துஷியந்தன் நகருக்கு அருகாமையில் உள்ளதொரு குளம்; அதன்கண் அரம்பைமாத நீராடுதல் பற்றி அப் பெயர் பெற்றது; சகுந்தலை அதன் பக்கமாய் அழுதுகொண்டு செல்கையில், அதன்கண் நீராடிக் கொண்டிருந்த மேனகை என்னும் அரம்பை மாது அங்ஙனம் அழுதுகொண்டு செல்பவள் தன் மகள் சகுந்தலையே யென உணர்ந்து அவளை எடுத்துச் சென்றாள் என்க.
மேனகை தேவமாதானதால் ஒளிவடிவுடையள் எனப் பட்டாள். இறும்பூது - (வடசொல்) ஆச்சரியம். சான்று (வடசொல்) சாட்சி.
ஆறாம் வகுப்பு
(பக். 99) அரசன் மைத்துனனான கொத்தவாலும் அவனுடன் இரண்டு காவலாளருமாக மூவரும் சேர்ந்து, ஒரு செம்படவனைப் பிடித்து, அவன் கைகளை இறுக்கிக்கட்டி நடத்திக் கொண்டு காண்டு வருகின்றார்கள். அவ்வாறு அவன் பிடித்துக் கட்டப் பட்டு வருதற்குக் காரணம், அவன் அரசன் பெயர் செதுக்கிய ஒரு கணையாழியை விற்க வந்தமையாற் கள்வன் என்று கருதப் பட்டமையேயாம். செம்படவனோ தான்