பக்கம்:மறைமலையம் 6.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

215

இது குறிப்பிடப்பட்டிருத்தலால் இது பண்டைக் காலத்தில் வ் விந்திய நாட்டிக்கண் வழங்கினமை அறியப் படும்; சீவகசிந்தாமணியிலும் இத்தகையதொரு மயிற்பொறி சுட்டப்பட்டிருத்தல் காண்க.

இங்கு ‘அரசமுனிவர்' என்றது துஷியந்தனை. விழா திருநாள். ‘திரஸ்கரிணி' என்பது ஒருவர் பிறர் கண்ணின் எதிரேயிருந்தும் அவர் கண்களுக்குப் புலனாகாதபடி செய்யும் ஒருவகை மாயமந்திர வித்தை.

L

(பாட்டு) விழுத்தக்கறறிந்தேன்.

-

தன் பொருள் : விழுத்தக்க - சிறப்புமிக்க, வேனில் உயிர் மிகுதரவே கொண்டு - வேனிற்காலத்திற்குரிய உயிர்ப்பினை மிகும் படியாய்க்கொண்டு, முழுச்செம்மை பசுமையுடன் வெண்மை எனும் மூன்றும் - மிக்க செம்மை பசுமை வெண்மை யென்னும் மூன்று வண்ணங்களையும், குழைத்திட்டால் என - ஒன்றுசேர்த்துக் கலந்து எழுதினாற்போல, வயங்கு கொழு மாவின் முகையே -விளங்காநின்ற கொழுவிய மாமரத்தின் அரும்புகாள், தழைப்பருவ நல்குறியாத் தயங்குநை என்று அறிந்தேன் - தழைக்கும் வேனிற்கால வருகை யினை முன் அறிவிக்கும் நல்ல அடையாளமாக நீ விளங்குகின்றனை என்று அறிந்துகொண்டேன் என்றவாறு.

‘விழுமம்' என்னும் உரிச்சொல் ‘விழு' என முதனிலை யளவாய் நின்றது; "விழுத்திணைப் பிறந்தது” என்புழியும் (புறம், 27) காண்க; விழுமம் சிறப்புப் பொருட்டாதல் “விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பும் ஆகும்” என்புழிக் காண்க (தொல் உரியியல். 57). உயிர்ப்பு கிளர்ச்சி. ‘மிகுதா’ ஒரு சொன்னீர்மைய. 'தழைப்பருவம்' எதுகை நோக்கி வினைத் தாகையினிடையே ஒற்று விரிந்தது; 'தழை' முதனிலைத் தொழிற்பெயராய்த் தழைத்தலையுடைய பருவம் எனப் பருவத்திற்கு அடைமொழியாய் நின்றதெனினும் ஆம்; அன்றித் தழைகளையுடைய பருவம் என அதைப் பெயர்ச் சொல்லாக வைத்துரைப்பினுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/246&oldid=1577729" இலிருந்து மீள்விக்கப்பட்டது