பக்கம்:மறைமலையம் 6.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் -6

(பாட்டு) இன்பநுகர்

கின்றார்.

-

-

-

(பக். 106) இதன் பொருள் : இன்பம் நுகர்பொருள் எல்லாம் வெறுத்துவிட்டார் - இன்பந் துய்த்தற்குரிய பொருள் களை யெல்லாம் உவர்த்து விட்டார், இனியநூல் அமைச்சரையும் கலவார் முன்போல் சிறந்த அரசியல் நூலாராய்ச்சியில் வல்ல மந்திரிமாரையும் முன்போற் கலந்து சூழார், கண்உறக்கம் இரவெல்லாம் பெறமாட்டாராய் கண் துயிலுதலை இராப்பொழுது முற்றும் பெறுதற்கு ஏலாத வராய், கட்டில்மிசை இங்கும் அங்கும் புரளுகின்றார் கட்டிலின்மேல் இப்பக்கத்தும் அப்பக்கத்துமாகப் புரள்கின்றார், தன் பெரிய மனை நல்லார் பேசும்போது தனது பெரிய அந்தப்புர அரண்மனைக்கண் வைகும் மாதர்கள் தன்னோடு உரையாடும்போது, தண்மையினால் சில சொல்லும் சொல்லின் உள்ளும் - அவர்பால் வைத்த அருள் காரணமாகப் பேசுஞ் சில சொற்களிலேயும், பெண் அரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லி - மாதர்க்கு அரசியான சகுந்தலையின் பெயரைத் தன்னை மறந்து தவறுதலாகச் சொல்லிவிட்டு, பெரிதுவரும் நாணத்தால் கலங்குகின்றார் - அங்ஙனந் தவறிச் சொல்லிவிட்டதை உடனே அறிந்ததும் அதனால் மிகுந்த நாணத்தினாலே உள்ளங் கலங்குகின்றார் என்றவாறு.

இச் செய்யுளில் அரசன் உயர்வுபற்றிப் பலர்பால் ஈற்றான் முடியினும், அவன் ஒருவனே யாதலால் ‘தன்’ என ஒருமைச் சொல்லாற் கூறினான்.

(பக். 107) கழிந்ததற்கு இரங்கல் - கடந்துபோன தவறான செயலுக்கு வருந்துதல். கோலம் -ஒப்பனை.

(பாட்டு) சிறப்பணி

ஒளியா னாதே.

இதன் பொருள் : சிறப்பு அணிகலங்கள் வெறுப்புடன் நீக்கி - சிறப்புடையவான நகைகளை வெறுப்பொடு களைந்து விட்டு, இடதுகை முன் பொன்கடகம் பிணைந்தும் இ து முன்கையிற் பொன்னாற் செய்த கைவளையைக் கட்டியும், நெடு

-

-

யிர்ப்பு எறிதலின் துப்பு இதழ் விளர்த்தும் பெருமூச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/249&oldid=1577732" இலிருந்து மீள்விக்கப்பட்டது