சாகுந்தல நாடகம்
-
219
விடுதலாற் பவளம் போற் சிவந்த இதழ் வெளுப்படைந்தும், துயிலாது இருத்தலின் பயில்விழி இடுகியும் - உறங்காமல் ருத்தலால் எந்நேரமும் திறந்திருக்கின்ற கண்கள் ஒடுங்கியும், உடல் மிக மெலிவுறலாயினும் உடம்பு மிகவும் மெலிவடைந்த தாயினும், சுடர்மணி தேய்த்தொறும் தேய்த்தொறும் ஒளிவிடும் ஒரு மணியை (இரத்தினத்தை) த் தேய்க்குந்தோறுந் தேய்க்குந்தோறும், வாய்த்த உருக்குறைந்து நிறம் மிக உறுதல்போல - தனக்கு இயற்கையாகப் பொருந்திய வடிவின் அளவு குறைந்தாலும் அது தன் ஒளியின் நிறம் மிகப் பெறுதல்போல, இறைவன் மேனியும் ஒளி ஆனது அரசனது - உடம்பின் நிறமும் ஒளியிற் குறையாது என்றவாறு. ஏ : அசை. வலதுகையி லிடவேண்டிய கடகத்த அரசன் கையிலிட்டது, பிறழ்ந்த அவனது மனநிலையைக் குறிக்கின்றது.
-
-
டது
(பக்.108) மான்பிணை பெட்டைமான். பரிவு கழிந்ததற்கு இரங்கல். அறங்கூறும் அவையம் - வழக்குகளை ஆராய்ந்து அறத்திற்கு ஒத்ததை அரசன் முடித்துச் சொல்லும் மன்று. அமைச்சரால் ஆராய்ந்து முடிவுகட்டப்பட்ட வழக்குகளையுந் தான் மீண்டும் ஆராய விரும்புந் துஷியந்த மன்னனின் செங்கோலாட்சியை ஈண்டு உற்றுநோக்குக.
(பக். 109) 'வாதாயணன்' கஞ்சுகியின் பெயர். (பாட்டு) துறவிமகள்
L
-
...OTT COT!
—
தன் பொருள் : துறவி மகள்மேல் வைத்த முனிவர் மகளாகிய சகுந்தலைமேல் வைத்து, தொல்காதல் மறைத்த மறதி எனும் இருள் பழைய காதலன்பை நினைவுகூர வொட்டாது மறைத்த மறதியாகிய இருள், நெஞ்சை மற்று அகன்ற பின்னே - என் நெஞ்சை அங்ஙனம் மறையாது விட்டு நீங்கியபின்னர், உறவருந்தும் எனைக் குறியிட்டு உலைப்பதற்கு மிகத் துன்புறும் என்னைக் குறிவைத்து அலைப்பதற்காக, மதனன் நிறம் மாவின் முகையை வில்லில் நிறுத்துகின்றான் என்னே - காமவேள் நிறத்திற் சிறந்த மாவினது மொட்டாகிய அம்மைபத் தனது வில்லின்கண் நிறுத்து கின்றனனே நான் உய்யுமாறு எங்ஙனம்; என்றவாறு.
-
னி