220
மறைமலையம் -6 *
காதலை ஒளியாகவும் மறதியை இருளாகவும் உருவகப் படுத்தினான். ‘மற்று' வினைமாற்றின் கண்வந்த இடைச்சொல். ‘என்னே’ என்னும் இடைச்சொல் இரங்கற்பொருளில் வந்தது.
(பக். 110) ஓவியம் - சித்திரம். உவப்பித்தல் - மகிழ்வித்தல். நேர்த்தி - சிறப்பு.
ஒப்பனை - (வடசொல்) அலங்காரம். அமர்தல் - இருத்தல்.
துஷியந்தன் வேட்டம் ஆடச் சென்று, காசியபர் உறையுளிற் சகுந்தலையைக் கண்டு காதல்கொண்டதும், அவளும் அங்ஙனமே அரசன்மேற் காதல்கொண்டதும், அப்போது தன்பக்கத்திருந்த விதூஷகன்பால் அரசன் தன் காதல் வரலாறுகளை விரித்துரைத்ததும், சகுந்தலையைக் கூடுதற்குமுன் நிகழ்ந்தனவாகும். திரும்பவும் அரசன் சகுந்தலையைக் கூடல் கருதிச் செல்லுங்கால், தன் அரண் மனைக்கண் உள்ள மகளிரிடத்து விதூஷகன் தன்காதல் வரலாறுகளைச் சொல்லிவிடுவான் என அஞ்சி, அவனை அவன் அத்தினாபுரத்திற்கு அனுப்பி விட்டமையும், அங்ஙனம் அனுப்பி விடுகையில் "உண்மையில் எனக்கு அத் துறவி மகளிடத்தில் எவ்வகையான விருப்பமும் இல்லை. * * * பகடியாய்ச் சொன்ன சொற்களை உண்மையாக நினையாதே என்று அரசன் கூறினமையும் இரண்டாம் வகுப்பிலும் அதன் ஈற்றிலுங் காண்க. ஆகவே, பின்னர் அரசன் தன்பால் வந்த சகுந்தலையை மனைவியாக ஏற்றுக் கொள்ளாமல் விலக்கி விடுங்கால், விதூஷகன் அரசன் பக்கத்தில் இருந்திலனேனும், அதற்கு முன்னாயினுஞ் சகுந்தலையைப் பற்றி அவன் அரசற்கு நினைவு ஊட்டாதது, அரசனுக்கும் அவளுக்கும் இடையே யாழோர் மணம் நிகழ்ந்ததை அவன் அறியாமையினாலேயாம். ஆகவே, விதூஷகன் தன்மேல் அரசன் ஏற்றிய குற்றத்தை மறுத்துரைத்தது வாய்மையேயாகும் என்க.
66
(பக். 111) பகடி - (வடசொல்) பரிகாசம்.
(பாட்டு) கொடியேனால்.
ஏங்கினளே.
நான்
இதன் பொருள் : கொடியேனால் - கொடுமைமிக்க என்னால், நீக்குண்டு - நீக்கப்பட்டு, கூடும் உறவினரோடும்