பக்கம்:மறைமலையம் 6.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

(பாட்டு) மெல்லிதா

றென்னையோ.

223

(பக். 114) இதன் பொருள் : மெல்லியதாய் - மென்றன்மை மெல்லியதாய்-மென்றன்மை யுடையதாயும், அழகிதாய் - அழகினையுடையதாயும், விளங்கு நீள் விரல் உடை-விளங்காநின்ற நீண்ட ஒவ்வொரு விரலையும் உடைய, அல்லி மென்கையை விட்டு - அல்லிக்கொடி போன்ற சகுந்தலையின் மெல்லிய கையைப் பிரிந்து, நீர்உளே ஆழ்ந்தது என் - நீரின் உள்ளே அக் கணையாழி அமிழ்ந்திப் போயது என்!, புல்லிய அறிவு இலாப் பொருள் அவன் நலம் பெறவல்லது அன்று - இழிந்த அறிவில்லாத அப்பொருள் அவளது நலத்தினை அடைதற்கு ஆற்றல் உடையது அன்று, ஏழையேன் மயங்கிற்று என்னையோ சிறிதாயினும் அறிவுடைய யான் ய மயங்கிவிட்டது யாது காரணமோ! என்றவாறு.

'மெல்லிதாய்' ‘அழகிதாய்' என்னும் ஒருமை வினைகள் ஒவ்வொரு விரலையுந் தனித்தனியே நோக்கி நின்றன.

அரசன் சகுந்தலையைப் பிரிந்து ஆற்றானாய் வருந்தும் வருத்தத்தில் விதூஷகன் ஈடுபடாதவனாயிருத்தலின், அவன் தான் உணவெடுக்கும் வேளை தவறிப், பசித்து வருந்தும் வருத்தத்தையே உணர்வானாயினான்.

(பக். 115) தன் முன்னிலையில் இல்லாத சகுந்தலையைத் தன்முன் உள்ளாள்போல் எண்ணி “மீண்டும் நின் உருவைக் காட்டி அருள் புரியாயோ" என்று அரசன் புலம்பினான்.

ஓவியத்தைக் கண்ட விதூஷகன், அதன்கண் வரைந்து காட்டப்பட்ட நிலத்தின் தோற்றங்கள் உண்மையில் உள்ளன போற் றோன்றுகின்றன வென்று உரைக்குமதுகொண்டு, அஞ்ஞான்றை ஓவியக்காரரின் ஆற்றல் நன்கு தெளியப்படும். துகிலிகை - ஓவியம் எழுதுகோல். வாய்வது - உண்மை.

(பக். 116) துவண்ட - ஒசிந்த. விளிம்பு - ஓரம். சாய எழுச்சி - வண்ணத்தின் கிளர்ந்த தோற்றம். சேடி தோழி.

(பாட்டு) தானே வலிவிலென்.

-

....மன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/254&oldid=1577737" இலிருந்து மீள்விக்கப்பட்டது