230
மறைமலையம் -6
சேர்ந்து, இந்திரனுக்குத் தந்தையாரான காசியப முனிவரும், அவர்தம் மனைவியாருந் தவமியற்றும் ஏமகூடம் என்னும் L மலையானது வழியிற் கட்புலனாக, அங்குச் சென்று அவ் வருந்தவப் பெரியாரை வணங்கவேண்டுமென்னும் பெரு விருப்பால் உடனே அங்கு ஏகி அத் தவப்பள்ளியினுள் மாதலி யுடன் நுழைகின்றான்.
அரசனது வருகையை முனிவர்க்கு அறிவித்தல்வேண்டி, மாதலி அரசனை ஓர் அசோகமரத்தடியில் இருக்கச் சொல்லி, முனிவர்பாற் செல்கின்றார். மரநீழலிலிருந்த அரசன், அங்கே ஓர் அழகிய சிறுவன் அஞ்சா நெஞ்சினனாய் ஒரு சிங்கக் குட்டியை அதன் தாயினின்றும் பிடித்திழுத்துக் கசக்கி ளையாட, அங்குள்ள முனிவர் மகளிர் அதனை யவனி னின்றும் விடுவித்தற் பொருட்டு அரசனுதவியை வேண்ட அவனும் அதற்கியைந்து அச் சிறுவன்பாற் சென்று உரையாடி னதிலிருந்து அவன் தன் மகனேயென்று உண்மை யறிகின்றான். இது கண்ட முனிவர் மகளிர் அங்கேயுள்ள சகுந்தலையின்பாற் து சென்று அந்நிகழ்ச்சியை அறிவிக்கச், சகுந்தலை உடனே போந்து அரசனைத் தெரிந்துகொண்டு கண்ணீர் சொரிகின்றாள்.
அரசனும் நெஞ்சம் ஆற்றானாய் அவளடிகளில் வீழ்ந்து தான் செய்த பெரும்பிழையைப் பொறுக்கும்படி வேண்டு கின்றான்.பின்னர் அரசன் தன் மனைவியோடும் மைந்தனோடும் மாதலியால் நடத்தப்பட்டுச் சென்று காசியபரையும் அதிதி அம்மையாரையும் வணங்கி, அவரால் வாழ்த்தப் பெற்றுத், தமது பிரிவுக்குக் காரணந் துருவாசர் வசவாதலையும் அவரால் உணர்ந்து, அவர்பால் விடைபெற்றுத், தேவேந்திரனது தேரிலேயே இவர்ந்து சகுந்தலை சர்வதமனனுடன் தன் நகரத்திற்குத் திரும்புகின்றான் என்னுமளவு இந் நாடக நிகழ்ச்சியை இவ் வேழாம் வகுப்பு முடித்துக்கூறுதல் காண்க.
விண் - வான்வெளி. அரியணை - (வடசொல்) சிங்காசனம். - - உரிஞ்சிய தேய்த்த. பரிமளம் - மிகுமணம். வானநாட்டில் மிகுமணம் வாய்ந்த ஐந்து மரங்கள் : அரிச்சந்தனம், மந்தாரம்,
-