பக்கம்:மறைமலையம் 6.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

231

சந்தானம், பாரிசாதம், கற்பகம் என்பனவாகும். நுகர்ந் தாங்கிருக்க துய்த்தபடியாய் இருக்க.

(பக். 130) 'நரசிங்கம்' என்பது உடல் மக்கள் வடிவுந்தலை சிங்கவடிவும் உடையவாகத் தோன்றிய விஷ்ணுவின் பிறவி யென்றும், இந்திரனது அரசைக் கவர்ந்த இரணியகசிபு என்னும் அரக்கனைக் கொன்று அவ்வரசை அவற்கு மீட்டும் உதவின தென்றும் புராணங் கூறும்.

எய்யப்பட்டார் உடம்பில் விரைந்து நுழைதல்வேண்டி, அம்புகளின் கணுக்கள் சுறசுறப்பின்றி வழுவழுப்பாக இழைக்கப் படும். இந்திரனுக்கு நரசிங்கஞ் செய்த வுதவியை ஏவற்காரரின் உதவியாகக் கூறுதல் அமையாமையின், தான் செய்ததனையே ஏவற்காரர் செயலாகக் குறிப்பிடுதல் வேண்டி அரசன் ‘இவற்றில்' என்று பன்மை வாய்பாட்டான் ஓதாது 'இதில்' என்று ஒருமை வாய்பாட்டால் துவங்கி 'இந்திரனது பெருமையே உண்மையிற் புகழற்பாலது; எவலாளர் அங்ஙனம் பெரிய முயற்சிகளிற் புகுந்து வெற்றிபெறுவதெல்லாந் தம் தலைவனது நன்குமதிப்பின் விளைவென்றே அறிமின்!' என்று மொழிந்தான். ஏவலாளர் -வேலைக்காரர். நன்கு மதிப்பின் விளைவு பாராட்டுதலால் உண்டாம் பயன். அறிமின் அறியுங்கள்; 'மின்': முன்னிலைப் பன்மை எவல் ஈறு.

வி

-

-

-

-

துறக்கநாடு சுவர்க்க உலகு. படாம் - சீலை. கேட்டார் கேட்டவைகளைத் தரவல்லது கற்பகமரம் என்று புராணங் கூறும். கிளர்ச்சி -எழுச்சி. நோக்கிற்றிலேன் - பார்த்திலேன். 'வளிமண்டிலம்' என்பது புராணவுரைப்படி இந் நிலவுகத்தி லிருந்து பகலவனுலுகு வரையிற் பரவியிருப்பது; இஃது எழு கூறுாகப் பிரிந்து நின்று முகில் மின்னல் களையும், பகலவனையும், மதியினையும், வான்மீன்களையுங், கோள் களையும், ஏழிருடிகளையுந், துருவமண்டிலத்தையும் இயக்கு மாற்றால் எழுபெயர்கள் பெறுமென்றும் புராணங் கூறும்.

L

கங்கயைாறானது மூன்று பிரிவுகளையுடைய தென்றும், அம்மூன்றில் ‘மந்தாகிநி' எனப்படுவது மேலே வானுலகத்தில் ஓடுவதென்றும், 'பாகிரதி' என்பது இந் நிலவுலகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/262&oldid=1577745" இலிருந்து மீள்விக்கப்பட்டது